சூடான சுவையான ஆனியன் சமோசா.!

ece328e49319d7ef9896c7f6ce95b6d9

ஸ்நாக்ஸ் வகைகளில் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று ஆனியன் சமோசா, இதனை பெரும்பாலும் நாம் கடைகளிலேயே வாங்கிச் சாப்பிடுவோம். அந்த சுவையான ஆனியன் சமோசாவை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1 கப்

எண்ணெய் – 1 ஸ்பூன்

வெங்காயம் – 4

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 

1.மைதா மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து பிசையவும்.

2.அடுத்து வெங்காயம், மிளகாய் தூள், சீரகப் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

3. அடுத்து சப்பாத்தி போல் பிசைந்த மாவை நீளமாக வெட்டி முக்கோண வடிவில் மடித்துக் கொள்ளவும்.

4.  அடுத்து காய்கறிக் கலவையை இதனுள் வைத்து முக்கோண வடிவத்தின் நுனியில் மைதா மாவினைத் தண்ணீர் தொட்டு தடவி ஒட்டவும்..

5.இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும், சூடான ஆனியன் சமோசா ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews