உலகின் உயரமான சிவலிங்கம் கன்னியாகுமரியில் திறப்பு

உலகில் பல விதமான பிரமாண்ட சிலைகள் உள்ளனர். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் சிலை,சர்தார் வல்லபாய் படேல் சிலை கன்னியாகுமரியில் புகழ்பெற்ற வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை என உள்ளது.


இந்நிலையில் பிரமாண்டமாக திருவள்ளுவர் சிலை உள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் அதே பிரமாண்டத்தில் ஒரு சிவலிங்கமும் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

இதுவரை கர்நாடக மாநிலம் கம்மசந்த்ரா என்ற இடத்தின் கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கமே உலகின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இதன் உயரம் 108 அடியாகும்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, ஆசியா புக் ஆப் ரிக்கார்டு ஆகிய புத்தகங்களில் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என பெயரை பெற்றுவிட்டது.

இந்த சிவலிங்கம் சிலை நேற்று திறக்கப்பட்டது. இந்த சிவலிங்கத்துக்குள்ளே எட்டு மாடிகள் அமைக்கப்பட்டுள்ளதாம் அதனுள்ளே அழகிய இறை ஓவியங்கள், சிற்பங்கள், புராணக்காட்சிகள் , சித்தர்கள், மகான்கள் பற்றி இடம்பெற்றுள்ளதாம் .

Published by
Staff

Recent Posts