ஹீரோ திரைப்படம் திருட்டுக் கதைதான்… டிவியில் ஒளிபரப்பத் தடை!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ஹீரோ, இந்த படத்தினை கோட்டபாடி ராஜேஷ் தயாரித்து இருந்தார். இதில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருந்தார்.

இந்தப் படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசை அமைத்து இருந்தார்.

பெரும் வரவேற்புக்கு இடையே வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் படம் குறித்து எழுந்த சர்ச்சைகள் பெரிய அளவில் பிரபலமாகின. அதாவது இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ ஹீரோ படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்து இருந்தார்.


இதுகுறித்த விசாரணையில் போஸ்கோவின் கதை ஹீரோ படத்தின் கதை போன்றே இருப்பதை அடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திராமல் ஹீரோ திரைப்படத்தினை ரிலீஸ் செய்த நிலையில், தற்போது அதற்கான தீர்ப்பு போஸ்கோ தரப்பிற்கு சாதகமாக வந்துள்ளது. 

தற்போது இந்த திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட இருந்தநிலையில், தொலைக்காட்சி மற்றும் ஓ டி டி தளங்களில் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால் இந்தப் படம் தொலைக்காட்சியில் இனி ஒளிபரப்பாகாது. நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்னர் இயக்குனர் கே.பாக்யராஜ் இது திருட்டுக் கதை என்பதை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Staff

Recent Posts