வாழ்க்கையை தொலைச்சுட்டேனே.. கண் கலங்கி அழுத ரஜினி.. அண்ணாமலை சொன்ன பாடம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 90களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அண்ணாமலை படம் குறித்து பலருக்கும் பலவிதமான புரிதல் இருக்கும். இதில் நடிகர் மணிகண்டனின் புரிதல் நிச்சயம் பலருக்கும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

தனக்கு துரோகம் செய்த நண்பனை வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்று ஓடும் ரஜினிகாந்த், கடைசியில் உண்மையை உணருவது குறித்த காட்சியை அழகாக எடுத்துரைத்திருக்கிறார் நடிகர் மணிகண்டன்.

அண்ணாமலை படத்தில் ரஜினி காரில் தனியாக சென்று, அமைதியாக நிற்பது போன்று ஒரு சீன் வரும். அந்த சீன் அந்த படத்தின் அடிநாதமாக இருக்கும். அதைதான் நடிகர் மணிகண்டன் அற்புதமாக விளக்கி உள்ளார். இதுபற்றி மணிகண்டன் ஊடகம் ஒன்றுக்க அளித்த பேட்டியில் கூறுகையில், “ஏதோ ஒரு இடத்தில் வண்டியை எடுத்துட்டு போய் ரஜினி நிற்பாரு.. அந்த சீன் ரொம்ப பிரில்லியண்டாக எழுதி இருப்பார்கள்..

ஒரு இடத்தில் மலை மேல் ரஜினி நின்று கொண்டிருக்கும் போது, மாட்டுக்காரன் வந்து, மாடுகளை அப்படியே கூட்டிக்கொண்டு செல்வார்.. ஏதோ ஒரு புலம்பலை அப்போது கேட்பார் ரஜினி. உங்களை எல்லாரையும் வீட்டுக்கு எடுத்துட்டு போய் கட்டி போட்டு நிம்மதியாக இருக்க போகிறேன், அப்படீன்னு சொல்வாரு..

ஜெயலலிதாவுடன் முதல் படம், ஆனால் ரிலீஸ் ஆகவில்லை.. ரஜினியை கடுப்பேற்றிய நளினிகாந்த்..!

ரஜினி சார் கண்ணு கலங்கி அழுவார்.. நான் எவனையோ பழிவாங்குறேன்னு என் வாழ்க்கையை தொலைச்சுட்டேனோ இவ்வளவு நாளு.. அவனை ஜெயிக்குறது தான் என் வாழ்க்கைன்னு நினைச்சுட்டேனடா.. நான் யாருன்றத மறந்துட்டனேன்னு சொல்லி ஒரு இடத்தில் ஒரு பெர்பார்மென்ஸ் பண்ணியிருப்பாரு.. அது காலத்திற்கும், எதற்காகவும் நாம் மனஇறுக்கத்தோடு வாழக்கூடாது என்பதை புரிய வைக்கும். உங்கள் வாழ்க்கையை எங்கயோ விட்டுவிட்டு நீங்கள் வேகமாக ஓடுகிறீர்கள் என்பதை புரிய வைக்கும் அந்த சீன்.” என மணிகண்டன் கூறியிருப்பார்.

நாம், நன்றாக யோசித்துப் பார்த்தோம் என்றால், நாம் யாரையாவது வெற்றி கொள்ளவோ, அல்லது யாரிடமாவது நல்ல பேர் வாங்கவோ வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருந்திருப்போம். நாம் வாழ வேண்டிய வாழ்க்கையை இழந்தது மட்டுமல்லாமல், ஒருவரிடம் நல்ல பெயர் எடுக்க நிறைய பேரிடம் சரியாக நடந்து கொண்டிருக்க மாட்டோம். உதாசீனப்படுத்தி இருப்போம்.

நாம் பெற்றது வெற்றியே அல்ல, அவனே ஒரு டம்மி பீஸ் என்று உணரும் போதோ, ஒருவருக்காக எல்லோரையும் உதாசீனப்படுத்தி இருப்போமே, அவர் நம்மை 5 பைசாவுக்கு கூட மதிப்பதில்லை என்று உணரும்போது தான் நம்மின் ஆகப்பெரிய தோல்வி தொடங்கும். அப்போது தான் வாழ்க்கையை நாம் புரிந்தும் கொள்வோம். இதைத்தான் அண்ணாமலை படம் உணர்த்தி இருக்கும்.கமர்ஷியல் என்பதை தாண்டி , அற்புதமான கதையில் ரஜினி நடித்த படம் அண்ணாமலை தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews