ஜெயலலிதாவுடன் முதல் படம்… ரிலீஸ் ஆகாத நிலை… ரஜினியை கடுப்பேற்றிய நளினிகாந்த்!

ரஜினிகாந்த் போலவே இமிடெட் செய்து அவரைப் போலவே ஆரம்ப காலத்தில் நடித்தவர் நடிகர் நளினிகாந்த். இவரது முதல் படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நடித்தது. ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. ஆரம்ப காலங்களில் ரஜினியை போலவே நளினிகாந்த் இருந்ததாகவும், ரஜினியை போலவே பெயரையும் வைத்து கொண்டதால் ரஜினி கடுப்பானதாகவும் கூறப்பட்டது.

25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி.. 2 நாட்களை திருப்பி கொடுத்த இயக்குனர்.. 175 நாள் ஓடிய குருசிஷ்யன்..!

1979ஆம் ஆண்டு சம்பா என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவானது. ஜெயலலிதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில்தான் நளினிகாந்த் நடிகராக அறிமுகமானார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த படம் கடைசி வரை ரிலீஸ் ஆகவில்லை.

nalinikanth3

இதனையடுத்து நளினிகாந்த் காதல் காதல் காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் தேவி தரிசனம், சத்திய சுந்தரம், எங்கம்மா மகாராணி, இதயம் பேசுகிறது உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் உள்பட பல தமிழ் நடிகர்களுக்கும், தெலுங்கில் சோபன்பாபு, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் வில்லனாக நடித்தார்.

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்யராஜ் அவருக்கு ஒரு கேரக்டரை கொடுத்திருந்தார். குழந்தைகளுக்கு வைத்திருக்கும் சத்துணவு பொருட்களை திருடி கொண்டு போய் விற்கும் கேரக்டரில் நளினிகாந்த் நடித்திருப்பார். அப்போது அதை பாக்யராஜ் கண்டுபிடித்து சத்துணவு திட்டம் குறித்து பெருமையாக பேசுவார். அதன் பிறகு நளினிகாந்த் திருந்துவார்.

ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!

முந்தானை முடிச்சு வெற்றி விழாவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலந்து கொண்ட நிலையில், என்னுடைய சத்துணவு திட்டத்தை நீங்கள் ரெண்டு பேரும் மக்களிடம் கொண்டு போய் சரியாக சேர்த்தீர்கள் என்று வாழ்த்தினார். அது தனக்கு மறக்க முடியாதது என்று பேட்டி ஒன்றில் நளினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.

nalinikanth2

இதனையடுத்து விஸ்வநாதன் வேலை வேணும், மங்கம்மா சபதம், அம்மன் கோவில் கிழக்காலே உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சில வருட இடைவெளிக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரியான நளினிகாந்த், சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படத்தில் வங்கி வாடிக்கையாளராக நடித்திருந்தார். நளினிகாந்த் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். குறிப்பாக மர்ம தேசம் சீரியலில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

தன்னை போலவே நளினிகாந்த் ஸ்டைல் செய்தார் என்பதற்காக ரஜினிகாந்த் இவர் மீது கோபமாக இருப்பதாக பலர் அவரிடம் கூறினார்கள். ஆனால் அவர் அது குறித்து எந்தவிதமான கவலையும் படவில்லை. ஆனால் ஒரு நாள் நளினிகாந்தை நேரில் ரஜினிகாந்த் சந்தித்தபோது அவரிடம் அக்கறையாக நலம் விசாரித்தார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தன்னுடைய கல்லூரி கால நண்பர், அவரும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தன்னை பற்றி அவ்வப்போது ரஜினியிடம் நல்ல விதமாக சொல்லி இருந்தார். அப்போதெல்லாம் ரஜினி ஆர்வத்துடன் தன்னை பற்றி விசாரிப்பார் என்றும் தன்னை போலவே நடிப்பவரா அவர் என்றும் ஆச்சரியமாக அல்லு அரவிந்திடம் கேட்டதாகவும் நளினிகாந்த் கூறியுள்ளார்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

ரஜினிக்கு என் மீது எந்த விதமான கோபமும் இல்லை என்பதை அப்போதுதான் தெரிந்துக் கொண்டதாகவும், பலர் தன்னிடம் தெரிவித்ததெல்லாம் தவறான தகவல்கள் என்பதை புரிந்து கொண்டதாகவும் நளினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...