17 வருஷ ஐபிஎல் ஹிஸ்டரில இப்படி நடந்ததே இல்ல.. விதியை மாற்றி சரித்திரம் படைத்த ஹென்றிச் க்ளாஸன்..

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே அதில் சில அதிரடி இன்னிங்ஸ்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் கிறிஸ் கெயிலின் 175 ரன்கள், ஒரே சீசனில் விராட் கோலி அடித்த நான்கு சதங்கள் என ஐபிஎல் தொடரின் பல அதிரடி நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படி ஒரு சூழலில் தற்போது ஆரம்பமாகி உள்ள 17 வது ஐபிஎல் சீசனிலும் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் க்ளாஸனின் அதிரடி ஆட்டம் பலரையும் மிரண்டு போக தான் வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிச்சயம் இந்த ஐபிஎல் இன்னிங்ஸ் மிகப்பெரிய பேசு பொருளாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இதற்கு காரணம் கொல்கத்தா அணிக்கு எதிராக இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடிய போது 209 ரன்கள் என்ற கடினமான இலக்காக தான் அதுவும் இருந்தது.

அது மட்டுமில்லாமல் மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி கொண்டு இருந்த சூழலில் கடைசியில் போட்டியும் ஹைதராபாத் கையை விட்டு சென்றது போல தான் இருந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் அவர்களின் வெற்றிக்கும் 81 ரன்கள் தேவைப்பட, ஏறக்குறைய போட்டியை தங்கள் பக்கம் கொண்டு வந்து விட்டார் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள ஹென்ரிச் கிளாஸன்.

அதிலும் கடைசி மூன்று ஓவர்களில் மொத்தம் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட கிளாஸன், கடைசி ஓவரில் அவுட் ஆனதால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் முக்கியமான போட்டியில் தோல்வி அடையும் நிலையும் ஹைதராபாத் அணிக்கு உருவாகி இருந்தது.

ஹைதராபாத் இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் கிளாஸனின் ஆட்டம் நிச்சயம் கொல்கத்தா மட்டும் இல்லாமல் மற்ற எட்டு அணிகளுக்கும் மிகப்பெரிய பீதியை கொடுத்திருக்கும் என்றே தெரிகிறது. இதனால் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஆடும் போது கிளாஸன் விக்கெட்டை எடுப்பதை தான் அனைத்து அணிகளும் முக்கியமாக கருதுவார்கள் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் தான் 17 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத ஒரு முக்கியமான சம்பவத்தை முதல் முறையாக செய்து பட்டையை கிளப்பி உள்ளார் கிளாஸன். அதாவது இந்த போட்டியில் ஒரு ஃபோரை கூட அடிக்காமல் மொத்தம் எட்டு சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார். ஐபிஎல் தொடரில் ஏராளமான சிக்ஸர்களை ஒரே இன்னிங்சில் பலரும் அடித்திருந்தாலும் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் அதிக சிக்ஸர் (8) அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...