ஆரோக்கியம் நிறைந்த கேரட் பால் ரெசிப்பி!!

cc234196a1ccf018a7e899e91916780d-1

கேரட்டில் நாம் பொதுவாக பொரியல், அல்வா போன்றவற்றினையே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது கேரட்டில் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கிலோ

பால் – 1 லிட்டர்,

நாட்டுச் சர்க்கரை – 150 கிராம்,

ஏலக்காய் – 5

செய்முறை

1. கேரட்டை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் போட்டு மைய அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும்.

2. அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

3. பால் கொதித்தும், கேரட் சாற்றை ஊற்றி கொதிக்க விடவும்.

4. அடுத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பாலை காய்ச்சி இறக்கினால் கேரட் பால் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews