ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ அடை!!

a602a365cf578e4a9a65591cc1cf11db

வாழைப்பூ அதிக அளவிலான சத்துகளைக் கொண்டதாக உள்ளது, அந்த வாழைப்பூவில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பூ – 1
உளுத்தம் பருப்பு – கால் கப் 
பச்சை பயறு – கால் கப்
புழுங்கல் அரிசி – ½ கப்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
பெருங்காய பொடி – 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1. வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து உளுத்தம் பருப்பு, பச்சைப் பயறு, அரிசி சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. அடுத்து அதனுடன் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து வாழைப்பூவுடன் அரைத்து வைத்துள்ள மாவு, உப்பு, பெருங்காயத் தூள், நீர் சேர்த்து கரைத்து எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் வாழைப்பூ அடை ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews