கால் வீக்கம் உள்ளதா? உஷார்…நுரையீரலுக்கு ஆபத்து…! உடனே கவனிங்க…

உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள சில அறிகுறிகளை நமக்கு உடலுக்கு வெளியிலும் சுட்டிக்காட்டும்.

அதிலும் குறிப்பாக நமது கால்கள் சுட்டிக்காட்டுகின்றன. காலில் உள்ள இந்த அறிகுறிகளால் நுரையீரல் மற்றும் கல்லீரல் நலமா என கண்டறியலாம்.

அதற்கான அறிகுறிகளைக் கால் வெளிப்படுத்துகிறது. கால்களில் பாதங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிகப்பும், பிரௌனும் கலந்த மாதிரி புள்ளி புள்ளியாக காலில் தெரிகிறது என்றால் நமது ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்.

leg dots
leg dots

இந்த உடலின் மொத்த எடையையும் தாங்கக் கூடியது கால்கள் தான். இதயம் பம்பிங் பண்ற ரத்தமானது காலில் இருந்து தலை வரை ரத்தம் ரத்த ஓட்டம் சீராக இயங்கி வருகிறது. கால்களுக்கு ரத்த ஓட்டம் வருவது சாதாரணமான விஷயம்.

தலைக்கு ரத்த ஓட்டம் செல்வது புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செல்வது என்பது சற்று கடினமான விஷயம். ரத்த ஓட்டம் சரியாக இருந்தால் தான் இப்படி தலைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நுரையீரல் பாதிப்பு இருந்தால் பாத வெடிப்பு இருக்கும். வைட்டமின் பி குறைபாடு, ஒமேகா 3 குறைபாடு, நியாசின் குறைபாடு இவற்றால் தான் பாத வெடிப்பு உண்டாகிறது. இதை சரி செய்தால் பாதவெடிப்பு குணமாகும்.

ஆண்டி ஆக்சிடண்ட் நிறைய உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஒமேகா 3 சின்ன சின்ன மீன்களான நெத்திலி, மத்தி மீன்களை சாப்பிட வேண்டும். அல்லது மீன் எண்ணையை சாப்பிடலாம்.

mathi fish
mathi fish

வீக்கம் எப்படி வருகிறது என்றால் நுரையீரலில் கெட்ட நீர் தங்கினால் இப்படி வீக்கம் வந்து விடும். சுவாசம் சரியாக இல்லைன்னா இதயம் ஒழுங்காக வேலை செய்யாது. நுரையீரலில் சிறிதளவு தான் தண்ணீர் தங்க வேண்டும். மீதமுள்ள கெட்ட நீர் காலில் தான் தங்கும்.

இந்தக் கெட்ட நீரில் தான் பாக்டீரியா தங்கி நாளடைவில் சாக்கடையாக மாற்றிவிடும். கெட்டுப்போன தண்ணீரை வெளியேற்றும் போது தான் இருமல், டிபி எல்லாம் வருகிறது.

இவர்கள் பக்கத்தில் நின்றாலே கெட்ட வாசனை வந்து விடும். ஆரம்ப காலகட்டத்திலேயே கால் வீக்கம் வந்தால் உடனே உஷாராகி அதை சரிசெய்து விட வேண்டும்.

leg veekam
swelling of leg

கால் பாதத்தின் முன்பகுதியிலும், பள்ளத்திலும் ஒருவிதமான வலி இருக்கும். தேவையில்லாத அரிப்பு வந்து கொண்டே இருக்கும். இதற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததும், பிளட் சுகர் டயபடீஸ் அதிகமா இருந்தாலும் இந்த அறிகுறிகள் தென்படும்.

மற்ற உறுப்புகளைக் காட்டிலும் நுரையீரலில் உள்ள கெட்ட காற்றும், டாக்;சின்களையும் வெளியேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த குப்பைகள் வெளியே செல்ல வழியின்றி அதற்கான அறிகுறிகளைக் காலில் தான் காட்டும். இதில் கெட்ட வாசனை வெளிவரும். அப்படி என்றால் நம் நுரையீரல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.

நகத்தில் சிதைவு காணப்படும். முதலில் சுகரை டீ காபியில் கூட குறைத்து சாப்பிட வேண்டும். பாக்கெட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதனால் நைட்ரஜன் வேஸ்ட் உடலில் தங்கி விடும்.

fiber foods
fiber foods

விரதங்கள் இருக்கலாம். நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை அறவே விட்டுவிட வேண்டும். சுகர் பிரச்சனையால் கண்கள், கிட்னி, லிவர் எல்லாமே பாதித்து விடும். அதனால் சுகரைக் கண்ட்ரோல் பண்ணினாலே போதும். எல்லாமே சரியாகி விடும்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.