ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் ‘டியர்’ படத்தின் பாடல் நாளை வெளியீடு… ரிலீஸ் தேதியும் அறிவிப்பு…

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் தற்போது படங்கள் நடிப்பதில் படு பிஸியாக உள்ளார். இந்த வருடம் அவருக்கு ஜாக்பாட் தான். ஒரு மாதத்தில் ஜி. வி. பிரகாஷின் மூன்று படங்கள் ரிலீஸாகிறது.

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி, பிரகாஷ் மற்றும் மமிதா பைஜூ நடித்த ‘ரெபெல்’ திரைப்படம் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகியது. இந்தப் படம் ஓரளவு கலந்த விமர்சனங்களையே பெற்று வருகிறது. அடுத்ததாக ஜி. வி. பிரகாஷ் இயக்குனர் பாரதி ராஜாவுடன் இணைந்து நடித்த ‘கள்வன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் நாயகியாக இவானா நடித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் முதல் முறையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜி. வி. பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் கூறுகையில், இது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கணவன் மனைவியை சுற்றி அமைந்துள்ள குடும்ப கதையாகும். ஒரு தம்பதியினர் திருமணத்தில் தங்கள் வாழ்க்கையில் தொடங்கி அந்த திருமண உறவு நீடுழி நிலைக்க என்ன தேவைப்படுகிறது என்பதை இந்தப் படம் எடுத்துரைக்கிறது என்று கூறினார்.

தற்போது, இந்த திரைப்படத்தின் பாடலான ‘மஜா வெட்டிங்’ என்ற பாட்டின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகிறது. மேலும் இந்த பாடலின் முழு விடியோவை நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த ‘டியர்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...