டியர் படத்துல நடிக்க வேண்டாம்னு நினைச்சேன்!.. டிரெய்லர் ரிலீஸ் விழாவில் ஜி.வி. பிரகாஷ் கொடுத்த ஷாக்!

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டியர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஜி.வி. பிரகாஷ் முதலில் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்றே நினைத்தேன் என பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

போன வருஷம் மணிகண்டன் குறட்டை விட்டு வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. அந்த படத்தின் கதை குறட்டை விடும் ஹீரோவுக்கு திருமணமாகி எப்படி சிக்கலை சந்திக்கிறார். கடைசியில் கிளைமேக்ஸ் எப்படி முடிகிறது என்பது தான்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் டியர்:

அதே போன்ற ஒரு கதையை கொண்டு உருவாக்கியிருக்கும் படம் தான் டியர். ஆனால், இந்த படத்தில் வித்தியாசமாக ஹீரோவுக்கு பதில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் நபராக நடித்துள்ளார்.

உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் டம்மி ஹீரோக்களை தனக்கு ஜோடியாக வைத்துக் கொண்டு நடித்து வருகிறார். கடைசியாக ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து ரன் பேபி ரன் படத்தில் நடித்த நிலையில், அந்த படம் சரியாக போகவில்லை. கடந்த ஆண்டு வரிசையாக ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களை வெளியிட்டு மொக்கை வாங்கி வந்தார்.

தற்போது இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் வரிசையாக படங்களை வெளியிட்டு வருகிறார். ஒரு படம் கூட இதுவரை வெற்றிப்படமாக மாறவில்லை. இந்நிலையில், வரும் ஏப்ரல் 11ம் தேதி டியர் படத்தை அதுவும் குட் நைட் படத்தின் கதையோடு வெளியிட போகிறாரே என்ன ஆகுமோ என கேள்விகள் எழுந்து வருகின்றன.

டியர் டிரெய்லர்:

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார் ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு முறை விமானத்தில் சந்தித்தேன். இந்த படத்தின் ஸ்க்ரிப்டை சொன்னார். சொல்லிவிட்டு நீங்க தான் நடிக்கணும்னு கேட்டார். எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு, அவங்களோட இணைந்து எப்படி நடிப்பது, அவங்க நடிப்புல ஸ்கோர் பண்ணிடுவாங்களேன்னு நினைச்சேன்.

படத்தின் கதையை கேட்டுவிட்டு வேண்டாம் என சொல்லிவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த போது இடைவேளை சீனை கேட்டு கண் கலங்கி விட்டேன். என்னிடம் இருந்து தப்பித்து ஓடி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த இயக்குநரை லாக் செய்து 2ம் பாதி கதையும் கேட்டு ஓகே சொல்லி விட்டேன். அப்படித்தான் இந்த படத்தில் நடித்தேன் எனக் கூறியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...