மேக்கப்மேன்கள் எல்லாம் என் மூஞ்சில தான் விளையாடுவாங்க… கவுண்டமணி சொல்லும் கலக்கல் காமெடிகள்

அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி கலகலப்பாக சில விஷயங்களைப் பற்றிப் பேசினார். அப்போது அவருடன் சத்யராஜூம் இருந்தார். என்ன சொல்றார்னு பார்க்கலாமா…

மேக்கப் பற்றி கவுண்டமணி கலகலன்னு ஒரு நகைச்சுவையை அவிழ்த்து விட்டார். விக் இல்லைன்னா நாங்கள்லாம் என்னைக்கோ ஊருக்குப் போயிருக்கணும். விக்கை கழட்டிட்டு வீட்டுக்கு வந்தா சம்சாரமே நீ யாருன்னு கேட்குறா. அந்த ரேஞ்ச்ல நாங்க இருக்குறோம். தயவு செய்து எங்க தலையை மட்டும் காட்ட சொல்லிடாதீங்க.

Goundamani
Goundamani

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்குப் பிடிச்ச கெட்டப் எதுன்னு சொல்லுங்கன்னு கேட்கிறார். உட்கார்ந்து ஒரு மணி நேரம் யோசனை பண்ணனும். எத்தனையோ கெட்டப். அதாவது 100, 150 கெட்டப் நான் போட்டுருப்பேன். எந்த கெட்டப் எந்த மேக்கப் மேன் போட்டாருன்னு எனக்கு எப்படி தெரியும் சொல்லுங்க.

எந்தக் கெட்டப்னு சொல்ல முடியாது. அப்படி சொன்னா ஏன்டா அந்தக் கெட்டப் நான் போட்டேன். என்னைச் சொல்லாம இந்தக் கெட்டப் இவன் போட்டான்னு அத்தனை மேக்கப் மேன்களும் என்னைக் கோவிச்சிக்க வக்கிறீங்களே என்றார்.

அப்போது சத்யராஜ் கவுண்டமணியைப் பற்றி இவ்வாறு சொல்கிறார். வாங்கப்பா நீங்க கத்துக்கறதுக்கு இதை விட சிறந்த முகம் வேற கிடைக்காது. வந்த உடனே எங்க மூஞ்சிக்கிட்ட வாங்க. கத்துக்கோங்க. புதுசா வர்ற மேக்கப் மேன், பழைய மேக்கப் மேன் எல்லாருக்கும் நான் கெடைச்ச மூஞ்சி தான். என் மூஞ்சில தான் விளையாடறது.விளையாடிக்கோங்கப்பான்னுடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நுழையறவங்க எல்லாரும் அவமானங்களை சந்திக்கணும். அப்படி நுழையறதுக்கே அதிர்ஷ்டம் வேணும். அப்புறம் நிலைத்து நிற்கறதுக்கு திறமை வேணும். அது மட்டும் இருந்தா பத்தாது. பொறுமை வேணும்.

அப்ப தான் ஸ்டெடியா ரொம்ப நாளைக்கு வறுமை இல்லாம இருக்க முடியும் என்று வருங்கால நடிகர்களுக்கு ஆலோசனையும் சொல்கிறார் கவுண்டமணி. இந்த நிகழ்ச்சியில் இதற்காக ஒரு குட்டிக்கதையும் சொல்லி அசத்தினார்.காமெடி நடிகர் கவுண்டமணியை திரையில் தான் காமெடி பண்ணுவதைப் பார்த்திருப்போம்.

இதையும் படிங்க… நான் இப்போ படம் நடிக்கிறதே அதிசயம்… ராமராஜன் சொல்வது என்ன? 25 வருஷத்துக்குப் பிறகு மீண்டும் சேர்ந்த கூட்டணி!

திரையில் எப்படியோ அதே போலத் தான் மனிதர் நிஜத்திலும் அவ்வப்போது கவுண்டர் கொடுத்து கலகலன்னு காமெடி பண்ணி குதூகலப்படுத்துவார். அவர் எதிரே பேசுவதற்கேப் பயப்படுவார்கள். அந்தளவுக்கு பட் பட்டென்று யாரென்று கூட பார்க்காமல் மனதில் பட்டதை படக்கென்று சொல்லி கவுண்டர் கொடுத்துவிடுவாராம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...