கோட் ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி விஜய்!.. போட்டிக்கு வரப்போவது கங்குவாவா? விடாமுயற்சியா?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அப்படத்தின் ரீலிஸ் தேதி வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் தி கோட் படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, பாண்டிச்சேரி, இலங்கை போன்ற இடங்களில் மேற்கொண்டு வருகின்றன. கடைசியாக இப்படத்தின் ஷுட்டிங் மாஸ்கோவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தி கோட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் வெங்கட் பிரபு ஒரு சில காட்சிகளில் நடித்துருக்கும் காட்சிகளை கேரளாவில் எடுத்ததாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 68வது படமான தி கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்து ஒரு படத்துடன் திரைத்துறையை விட்டு விலகுவதாக தெரிவித்த விஜய் அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு ஈடுபாட்டுடன் மக்களுக்காக சேவை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், தளபதி 69 படத்தை இயக்க அட்லி, வெற்றிமாறன், ஆர் ஜே பலாஜி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் போன்றவர்களின் பெயர் அடிப்பட்டிருந்த நிலையில் இறுதியாக அப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து தி கோட் படத்தின் அப்டேட்டை தளபதி ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் தி கோட் அரைவ்ஸ் ஆன் செப்டம்பர்5 , எங்க தளபதிக்கு விசில்போடு என்ற ஹேஷ்டேகுடன் புதிய போஸ்டரையும் பதிவிட்டுள்ளார்.

கோட் திரைப்படம் செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆசிரியர் தினத்தை ஒட்டி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தளபதி ரசிகர்களுக்கு தரமான விருந்தை தளபதி விஜய் மற்றும் கோட் படக்குழுவினர் கொடுத்து ரசிகர்களை சூப்பர் ஹேப்பி ஆக்கியுள்ளனர்.

விஜய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் விடாமுயற்சி அதே நாளில் போட்டி ரிலீஸாக வருமா? அல்லது தீபாவளிக்கு வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதை பொறுத்து தான் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்கின்றனர்.

சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த முறை விஜய்யின் கோட் பட்த்துடன் மோதுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...