பாரம்பரிய உணவான இஞ்சி தேங்காய் சாதம்! ஒருமுறை சாப்பிட்டா மறக்கவே மாட்டிங்க…

தேங்காய் சாதம் பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும், குழந்தைகள் விடாமல் சாப்பிடுவார்கள் மேலும் தேங்காயில் அதிக சத்துக்கள் நிறைந்தது, இந்த தேங்காய் சாதத்துடன் இஞ்சி சேர்த்து சமைத்தால் சுவை சிறப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்..

அரிசி – 2 கப்

இஞ்சி – 2 துண்டு

தேங்காய் பால் – 1/2 கப்

பூண்டு – 6-8 பல்

வெங்காயம் – 1

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

வெண்ணெய் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை..

முதலில் கடாயில் வெண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் அரிசி, தேங்காய் பால், 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதில் மல்லி இலைகளைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தண்ணீர் முழுவதும் வற்றி விடும்.

நாகர்கோவில் ஸ்பெஷல் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு- சுட்ட அப்பளம்.. இனி நம்ம வீட்டுலயும் செய்து சாப்பிடலாமா!

இப்பொழுது சூப்பரான சுவையில் இஞ்சி தேங்காய் சாதம் தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews