விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகருக்கு விநாயகர் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் ‘நோன்பு’ கடைபிடிப்பது வழக்கம். பொதுவாக இந்த நாளில் கோயிலுக்குகூட செல்லத் தேவையில்லை வீட்டிலேயே களிமண்ணாலோ அல்லது மஞ்சள் பொடியில் நீர் குழைத்து சிலை செய்து பிள்ளையாரை வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும்.

அந்தப் பிள்ளையார் விரதத்தை பய பக்தியுடன் கடைபிடித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மேலும் விநாயகருக்கு பச்சரிசி மாவும், வெல்லமும் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து, பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதில் திரியை இட்டு ஏற்றி, பிள்ளையார் முன்காட்டிவிட்டு அதைச் சாப்பிட நோய் நொடிகள் நம்மைவிட்டு அகலும்.


மேலும் விநாயகர் முன் அமர்ந்து விநாயகர் ஸ்துதி பாடுவதோடு, கருப்பட்டி பணியாரம், சுண்டல், அவல், பொரி, கடலை வைத்து படையலிட்டு வழிபட வேண்டும். வீட்டில் மன நிம்மதி அதிகரித்து, செல்வம் பெருகும்.

பிள்ளையார் சதுர்த்தியன்று, விநாயகருக்கு நம் கையாலேயே தொடுத்து அருகம்புல், மற்றும் மல்லிகை மாலை அணிவிக்கலாம். கூடாத திருமணங்கள் விரைவில் கைகூடும்.

மேலும் தெருமுனையில் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் கோவிலை சுற்றி வந்து வழிபடுவதன் மூலம் மனம் தூய்மையாகும். வருடம் முழுவதும் இப்படி சுற்றி வந்து செய்யும் வழிபாட்டினை விநாயகர் சதுர்த்தி அன்று செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வி அறிவு மேம்படும்.

Published by
Staff

Recent Posts