செய்திகள்

ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்.. கண்காட்சியில் வைக்கவுள்ள ரஷ்ய அருங்காட்சியகம்!

ஹிட்லர் கொடுங்கோலராக உலக வரலாற்றில் சித்தரிக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரி ஆவார். ஹிட்லர் ஜெர்மனியை 1933 ஆம் ஆண்டு துவங்கி 1945 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

ஹிட்லர் யூதர்களை ஒழிக்க எண்ணி உலகை அதிரவைக்கும் பல சம்பவங்களைச் செய்துள்ளார். மேலும் தன்னுடைய ஆட்சியில் 60 லட்சம் யூதர்ளை கொல்லவும் செய்துள்ளார்.

யூதர்களை நினைத்து வருந்திய மகாத்மா காந்தி ஹிட்லருக்கு அந்த காலகட்டத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்தக் கடிதம் பல ஆண்டுகளாக ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்த ஆண்டு கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க உள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த கடிதத்தைப் பார்க்க இப்போதே மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

Published by
Gayathri A

Recent Posts