இந்தியன் 2 இன்ட்ரோ வெளியானதும் இசைப்புயலை மிஸ் பண்ணும் ரசிகர்கள்!.. அனிருத்தை இப்படி கலாய்க்கிறாங்களே!..

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் இன்ட்ரோ வீடியோ இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமீர்கான், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் கிச்சா சுதீப், தெலுங்கு திரை உலகத்தின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டனர்.

1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம் தேசிய விருது வரை வென்று இருந்தது. அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அருமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில், ஏ ஆர் ரகுமானை தவிர்த்துவிட்டு இயக்குனர் சங்கர் அனிருத்தை இசையமைக்க தேர்வு செய்திருந்தார்.

இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ

இந்நிலையில் இன்று வெளியான இன்ட்ரோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்தியன் படத்தில் இருந்தது போல இசை இல்லையே என்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மிஸ்ஸிங் என்றும் பதிவிட்டு ஏகப்பட்ட ட்வீட்டுகளை சமூக வலைத்தளங்களில் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

மேலும், இந்தியன் 2 எனும் பெரிய படம் கிடைக்கும் அனிருத் ஏன் இப்படி ஒரு சொதப்பலான இசையை கொடுத்துள்ளார் என பலவிதமான ட்ரோல் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் தான் மாஸ்

ஊழலுக்கு எதிரான படமாக இந்தியன் திரைப்படம் இருந்த நிலையில், இந்தியன் 2 படத்திலும் அதே கதையை இயக்குனர் ஷங்கர் கொண்டு வந்திருப்பது ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை என்றே தெரிகிறது.

இந்தியன் படத்தை சிவாஜி படத்தின் பாணியில் ஷங்கர் எடுத்து இருப்பதாகவே பலரும் விமர்சித்து வருகின்றனர். சமயபுரத்தில் டீசர் வெளியான பிறகு மிகப்பெரிய ட்ரோலை சந்தித்த பிரபாஸின் ஆதி புருஷ் இருந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் விஷுவல் மிரட்டினாலும் இசை அதற்கு ஈடு கொடுக்கவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனிருத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த எதிர்ப்பு இந்தியன் 2 பிசினஸ் மற்றும் வசூலை பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். ஷங்கர் தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை நிச்சயம் அவர் ஏமாற்ற மாட்டார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியன் 2 திரைப்படம் சொதப்பினால், அடுத்து வரும் இந்தியன் 3 திரைப்படத்திற்கு சுத்தமாக எதிர்பார்ப்பு இருக்காது என்றும் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் என்ன ஆகும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே இந்த படத்திற்கு இசையமைத்திருந்தாலும், இந்தியன் படத்துக்கு போட்ட மாதிரி இல்லை என்று தான் ரசிகர்கள் விமர்சித்து இருந்திருப்பார்கள். அதற்கு கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களே பெரிய உதாரணமாக உள்ளது. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் எப்படி இசையமைத்துள்ளார் என்பதை காத்திருந்து காண்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...