தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான் கிருஷ்ணம் ராஜு காலமானார்!!!

தற்போதைய சினிமா நட்சத்திரங்கள் பலரும் மெல்ல மெல்ல அரசியலுக்கு நுழைகிறார்கள். மேலும் பலரும் ஒரு சில கட்சிகளில் இணைந்து எம்எல்ஏக்கள் ஆகவும் எம்பிக்களாகவும் திகழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

ஆயினும் கூட அவர்களுக்கு ரசிகர்களிடையே பெருத்த வரவேற்கும் மரியாதையும் ஆரம்பத்தில் இருந்தது போல் தற்போது வரை கிடைத்து கொண்டுதான் காணப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்ட கிருஷ்ணம் ராஜு என்பவர் சில வருடங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

அதன் பின்பு அவர் எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ராஜு உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.

இவருக்கு தற்போது 83 வயதாகிறது. சுமார் 200 படங்களில் நடித்துள்ள கிருஷ்ணன் ராஜு கடைசியாக பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். பாஜக சார்பில் எம்பியாக இருந்த கிருஷ்ணம் ராஜு 1999 முதல் 2004 வரை மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார்.

இவரின் மறைவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட கிருஷ்ணம் ராஜு  அரசியலிலும் முத்திரை பதித்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews