விடைத்தாள்களை தாமதமாகப் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்கள் பெயில். குமுறும் கல்லூரி மாணவர்கள்!

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடியதுகொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கின் ஒரு பகுதியாக வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கொரோனாப் பேரலையின் மூன்று அலைகள் உலகம் முழுவதிலும் தலை விரித்தாடி ஓய்ந்து முடிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு நேரடி வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வானது ஆன்லைன் முறையில்தான் நடைபெற்றது.

ஆனால் மாணவர்கள் தேர்வுகளில் பல மோசடிகள் செய்வதையொட்டி கேமராமூலம் தேர்வின்போது கண்காணித்தனர்.

அதுபோக விடைத்தாள்களை தேர்வு முடிந்த கையோடு பதிவேற்றம் செய்ய வலியுறுத்தினர். ஆனால் மாணவர்கள் விடைத் தாள்களை பதிவேற்றம் செய்வதை தாமதம் செய்தனர்.

இதனால் தமிழக அரசு தாமதமாக விடைத் தாள்களை பதிவேற்றியவர்களை பெயில் பண்ணக் கோரியும், ஆப்செண்ட் பண்ணக் கோரியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவால் 10,000 மாணவர்கள் பெயில் ஆவார்கள் என்று கூறப்படுகின்றது, இந்த செய்தியினைக் கேட்ட மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Published by
Gayathri A

Recent Posts