ஆன்மீகம்

எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூர் திருச்சி

திருச்சிராப்பள்ளி நகரில் இருக்கும் திருவெறும்பூரில் இருக்கும் ஒரு அழகிய கோவில்தான் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் ஆகும். திரு எறும்பியூர் என இக்கோவில் சம்பந்தமான பெயரே தற்போது இவ்வூரின் பெயராக மாறி உள்ளது.

தாராகாசுரன் என்னும் என்னும் கொடும் அசுரன் ஒரு காலத்தில் கடும் துன்பங்களை செய்து வந்தான். இவனின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் , முனிவர்கள் தற்போது கோவில் இருக்கும் மலையில் இருக்கும் சிவபெருமானை தொழுவதற்காக சென்றார்கள்.

இந்த ஈசனை காண்பதற்கு தாராகசுரனுக்கு தெரியா வண்ணம் எறும்புபோல் மாறி ஊர்ந்து சென்றார்களாம்.

மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை அடைந்த உடன் அதில் சிவ லிங்கத்தைத் வணங்க எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என இக்கோவில் இறைவன் அழைக்கப்படுகிறார்.

முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் ஆகியோர் இக்கோவில் திருப்பணிகளை செய்துள்ளனர்.

இங்குள்ள மூலவரான லிங்கம் மண்புற்றுவடிவில் உள்ளது அதற்கு கவசம் இடப்பட்டுள்ளது .திருநாவுக்கரசரால் பாடப்பட்ட இக்கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் திருச்சி செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவிலாகும்.

Published by
Abiram A

Recent Posts