ஆசைக்காக அளவுக்கு அதிகமா அன்னாசி பழம் சாப்பிட்டா இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள்…

பொதுவாக அன்னாசி பழம் அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்றாக உள்ளது. அன்னாசிப்பழம் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றங்களால் நிரம்பி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்களால் சொல்லப்படுகிறது .

இதிலிருந்து விட்டமின் சி சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இத்தகைய அன்னாசி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என பார்க்கலாம் .

அன்னாசிப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக சொல்லப்படும் நிலையில் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நீரழிவு நோயாளிகள் இதனை சாப்பிடும் விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இந்த பழத்தை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது, நன்றாக பழுக்காத பழம் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

அன்னாசி பழத்தோட சாறு மற்றும் தண்டில் என்சைம் இருக்கிறது. இந்த நொதி நம்மளுடைய உடலில் பல விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். இயற்கையான பிரமலையின் ஆபத்தானதாக இருப்பதில்லை. ஆனால் இரத்தத்தை மெலிதாகும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் இதை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தப்போக்கு அதிகமாகும் என கூறப்படுகிறது.

உணவு சாப்பிட்டதும் கழிப்பறையை தேடி ஓடுபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கு தான்…

மேலும் அன்னாசி பழத்தின் அமிலத்தன்மையின் விளைவாக ஈறுகள் மற்றும் பற்கள் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews