ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!

வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை நல்ல பயனுள்ள வகையில் பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வகையில் வாழ்ந்தால் நமக்கு எந்த விதத்திலும் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

எந்த வகையான சூழல் வந்தாலும் நாம் யாரிடமும் கெஞ்ச வேண்டாம்…இந்த நிலைக்கு நாம் வந்து விட்டால் அடுத்தடுத்த படிநிலைகளை எட்டிப் பிடித்து வாழ்வில் ஒரு உன்னதமான நிலையை எட்டி விடலாம். அது எப்படி என்று இப்போது hhர்ப்போம்.

steps of life
steps of life

யாரையும் கெஞ்சாதீங்க. ரொம்ப ரொம்ப கெஞ்சாதீங்க. யாரையும் ரொம்ப தொங்காதீங்க. யாரையும் ரொம்ப விரட்டிப் போகாதீங்க. மனிதர்களானாலும் சரி. சூழல்களானாலும் சரி. எதையும் ரொம்ப விரட்டி நம்மை வருத்தி இக்கட்டான சூழலுக்கு நம்மைத் தள்ளி இன்னொரு மனிதரைப் போய் சந்தித்து கெஞ்சுவது, சில பேர் காதல்னு சொல்வாங்க. சில பேர் வாழ்க்கையில ஜெயிக்கறதுக்காக சில விஷயங்களை செய்வாங்க. நண்பர்களைத் தேடிப் போவாங்க.

எல்லாம் சரிதான். எல்லாம் ஒரு பாசம். அன்புன்னு எல்லாருக்கும் தெரியும். நம்ம சுயமரியாதையை அளவுக்கு மீறி இழக்குற அபாயம் வரும். அந்தக்கட்டத்துல நீங்க இந்த முடிவை எடுத்துத்தான் ஆகணும். இல்லாவிட்டால் நாமே நமக்கு மரியாதை கொடுக்காத சூழலுக்கு ஆளாகிவிடும். நாமே நம்மளை ஒரு மனுஷனாகவே மதிக்கல என்ற நிலை வந்துவிடும்.

நம்மளையே நம்ம மதிக்காட்டி யாரையும் நீங்க தேடிப் போயி என்ன பயன்? நீங்க உங்க சிந்தனையை வளர்த்துக்கோங்க. உங்களை வளர்த்துக்கோங்க. நீங்க என்ன ஒரு மனிதரா இருக்கீங்களோ அதுல முழுமையை உணருங்க. உங்களுக்கு என்னவோ உங்களைத் தேடி வரும்.

தேவையில்லாம மக்களைத் தேடிப் போறது…சூழலைத் தேடிப் போறது..மக்களை விரட்டி விரட்டி உங்களைத் தாழ்த்தி தாழ்த்தி நீங்க போயிக்கிட்டே இருந்தீங்கன்னா இப்பவே உங்களை மாத்திக்கோங்க.

self confidene
self confidene

ஒண்ணையும் நினைக்காதீங்க. அய்யய்யோ நாம இப்படி பண்ணிட்டா அந்த மனிதர் நம்மை விட்டுப் போயிருவாங்களோ…இதுக்கு மேல நல்ல சூழல் அமையாதா…இதுக்கு மேல நல்ல மனிதர்கள் கிடைப்பார்களா…இதுக்கு மேல நல்ல வேலை கிடைக்காதா…ங்கற பயம் நமக்குள் வரும். இந்த பயத்தை நம்ம மனசு தான் தூண்டும். கண்டிப்பா அதுக்கு மேல நல்ல மனிதர் உங்களுக்கு கிடைப்பாங்க. நல்ல வேலை வரும். நல்ல சூழல் கண்டிப்பா வரும்.

ஐயய்யோ இனிமே நல்ல வாய்ப்பு கிடைக்காதோன்னு பயப்படுறது தான் நம் வீக்னஸ். அதனால தான் நல்ல விஷயங்களும் கிடைக்காமப் போகுது. தைரியமா இருங்க. ரொம்ப தேவையில்லாம விரட்டி விரட்டி உங்க தன்மானத்தை இழந்து உங்க வாழ்க்கையை இழந்துடாதீங்க. இது ஒரு வாழ்க்கைப் பாடம். நிறைய பேரு இதனால சந்தோஷமா இருக்காங்க.

சாதிச்சவங்களுக்குப் பின்னால போய் பார்த்தால் இந்தப் பாடத்தை அவங்களும் ஏற்கனவே கடைபிடிச்சிருப்பாங்க. இது புரிஞ்சதுன்னா லைப்ல நிறைய டைம் வேஸ்ட் பண்ண வேண்டியிருக்காது. உங்களுக்குத் தேவையான விஷயங்களைப் பண்றதுக்கு உங்களோட முழு எனர்ஜியையும் ஒருமுகமாகக் குவித்து இன்னும் பல படிநிலைகளில் உயரலாம்.

லைப் வந்து ரொம்ப ஷார்ட். நாம நினைக்கலாம். 40….50….வருஷம் இருக்குன்னு…இது இப்படி ஒரு சொடக்கு அடிக்கறதுக்குள்ள போயிடும். அதனால டைம் வேஸ்ட் பண்ணாம…உங்களுக்குத் தேவையான விஷயங்களைப் பயன்படுத்தி பிடிச்ச மாதிரி வாழுங்க. போராட்டம் இருக்கும். அது வேற விஷயம். ஆனா…உங்களுக்குப் பிடிச்சதுக்காக போராட பழகிக்கோங்க.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews