வில்லன் கதாபாத்திரங்களைக் கொண்டாடக்கூடாது… டாப்சி அட்வைஸ்!!

டாப்சி சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் 2 வது படமாக தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்னும் படத்தின்மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய நடிகையாக வலம் வந்த இவருக்கு இந்தி சினிமாவிலும் தொடர் வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது பாலிவுட்டிலும் அவர் தொடர் வாய்ப்புகளைப் பெற்று ஒரு முன்னணிக் கதாநாயகியாக வலம் வருகிறார்.


நேற்று அவர் இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் வில்லன் கதாபாத்திரங்களைக் கொண்டாடக்கூடாது என்று கூறியுள்ளார்.  அவர் கூறும்போது, “இந்த உலகில் ஆணும் பெண்ணும் சமத்துவமாக வாழ வேண்டும். உண்மையில் அதற்காக நான் எப்போதும் துணை நிற்பேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் திரைப்படங்களில் வரும் வில்லன்  கதாபாத்திரங்களை பாராட்டுவதோடு, அதற்கு ரசிகர்களாகவும் மாறிவிட்டனர்.

முன்பு வில்லன் என்றாலே அவர் தவறான குணங்களைக் கொண்டவர் என மக்கள் வெறுத்ததையும் நான் பார்த்திருக்கிறேன். நான் பத்லா படத்தில் வில்லியாக நடித்து உள்ளேன்,

தற்போது கபீர் சிங் படத்தினை சிலர் தொடர்ந்து கொண்டாடுவது எனக்கு ஷாக்காக உள்ளது. மோசமான பழக்கம் கொண்ட வில்லனை ஏன் கொண்டாடுகிறீர்கள்?” என்று கூறியுள்ளார்.

Published by
Staff

Recent Posts