வதந்திகளை நம்ப வேண்டாம்..! கண்ணீரோடு செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்;

கடந்த மாதம் 19ஆம் தேதி திரையுலகின் பிரபல இயக்குனர் பன்முக கலைஞர் டி ராஜேந்திரன் வயிற்றில் இரத்தக்கசிவு காரணமாக சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

TRajendar 750

இருப்பினும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது பல வதந்திகள் தமிழகத்தில் அதிகமாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றைய தினம் சிகிச்சை பெற்று சென்னைக்கு திரும்பினார்.

trajendar tr 10

சென்னைக்கு திரும்பிய உடன் செய்தியாளர்களை சந்தித்த போது கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது தன்னைப்பற்றி வந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதிலும் எனக்காக என்னோடு என் சொந்தங்கள் அனைவரும் இருந்தார்கள் என்று கூறினார். அதனையும் தாண்டி எனது ரசிகர்கள், தமிழ் மக்கள், உலகமெங்கும் உள்ளவர்கள் எனக்காக இருந்தார்கள் என்று உருக்கமாகக் கூறினார்.

மென்மேலும் நான் நன்றாக இருக்கிறேன், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறியது அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே நிம்மதியை கொடுத்துள்ளதாக காணப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் செய்தியாளர்களிடம் நீங்கள் கேள்வி கேட்ட போதெல்லாம் பதில் சொன்னேன். இன்று நான் போயிட்டு வந்துவிட்டு மீண்டும் பதில் சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.