Sakthivel: ஜோதியின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வரும் டாக்டர்… மெய்யநாதன் வருகையால் அதிர்ச்சிக்குள்ளாகும் சக்தி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தியிடம் ஜோதி என் மதிப்பை குறைத்து என் இடத்திற்கு வருவதற்கு தானே நீ எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க, டாக்டரை வர சொல்லியிருக்கேன், உன் வேஷம் கலைஞ்சிடும்னு சொல்கிறாள். மறுபுறம் மெய்யநாதன் சக்தியை காண கிளம்புகிறார். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனிக் காணலாம். ஜோதியின் அழைப்பை ஏற்று டாக்டர் வீட்டிற்கு வருகிறார். தேனு கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய தேனுவுடன் சக்தி வந்ததை மனதில் நினைத்து டாக்டர் சக்தியை பெருமையாய் பேசுகிறார். ஜோதி ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழிக்கிறாள். அப்பாடா தப்பிச்சோம் என்று வேலு நினைத்துக் கொள்கிறான்.

பின்னர் சக்தி சூட்கேசில் தனது துணிகளை பேக் செய்து கொண்டிருக்கிறாள். வேலு என்னவென்று கேட்கிறான். அதற்கு சக்தி நீ டாக்டரிடம் தப்பித்திருக்கலாம். ஆனால் எனக்கு பொய் சொல்லிட்டும் பொய்க்கு துணை போயும் பழக்கம் இல்ல, அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, உறுத்தலா இருக்கு, தூக்கம் வரமாட்டீங்குது. நான் பொய் சொல்லிட்டு இங்க வாழறதை விட உண்மையை சொல்லிட்டு எங்க வீட்டுக்கு போறேன் அப்படினு சொல்லிட்டு கிளம்ப தயாராகிறாள். வேலன் நான் செத்தாலும் நீ என்னை விட்டு போக முடியாது சொல்லி தடுக்கிறான்.

அங்கு சக்தியின் தோழி கௌரி மெய்யநாதன் வீட்டிற்கு வருகிறாள். சக்தியின் அம்மா சக்தி முழுகாம இருக்கானு கௌரியிடம் சொல்கிறார். அதைக் கேட்டு கௌரி சந்தோஷமடைகிறார். கஸ்தூரி கௌரிக்கு பூ வைத்து விட பார்க்கிறாள். வழக்கம் போல் மீனாள் பிரச்னை செய்கிறாள். பங்கு போட்ட பூ எனக்கு வேணாம் கொடுத்தா முழுசா எனக்கு கொடுங்க அப்டினு சொல்கிறாள். கௌரி பூவை மீனாளுக்கு கொடுங்க என்று சொல்லிவிடுகிறாள்.

அடுத்ததாக சக்தி உண்மையை சிக்கல் சிவபதியிடம் சொல்வதற்காக வெளியே வருகிறாள். அப்போது தனது அப்பா மெய்யநாதன் கையில் ஸ்வீட்டுடன் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள், வருத்தமடைகிறாள். சிக்கல் சிவபதி மெய்யநாதனை சந்தோசமாக வரவேற்கிறார். மெய்யநாதனும் நல்ல செய்தி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு இன்னிக்குதான் மறுபடியம் நல்ல செய்தி கிடைச்சிருக்கு, இன்னிக்கு நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல நாள் என்று சொல்கிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews