யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் புது படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் யோகிபாபு. இந்தப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது.

yogibabu3yogibabu 2 1

மனித உயிர் மட்டும் அல்ல மற்ற உயிர்களையும் மகத்துவமாக பார்க்க வேண்டும் என்ற கதையம்சத்துடன் அமைந்த படம் தான் ஒரு கிடாயின் கருணை மனு. 2017 ஆம் ஆண்டு வெளியான சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில் இது முதல் படமானாலும் கூட படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எதார்த்தமாக உருவாக்கி மக்கள் மனதில் நின்று விட்டார். பிறகு 6 வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு 2023 ஆம் ஆண்டு இவரது சத்ய சோதனை திரைப்படம் வெளியானது. ஒரு கிராமத்து காவல் நிலையத்தை மையமாக வைத்து ஒரு கொலை வழக்கை எப்படி கண்டுபிடிக்கிறரகள் என்பதை காமெடி கலந்து கூறியிருப்பார் சுரேஷ் சங்கையா.

தற்போது யோகிபாபுவுடன் இணைத்திருக்கிறார். யோகிபாபு எப்படிப்பட்ட தனித்துவமான கதைகளில் நடிப்பார் என்று அனைவரும் அறிந்த ஒன்று. சுரேஷ் சங்கையா-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் படம் நிச்சயம் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும்.

படத்தின் கதாநாயகியாக நடிகை விஜி சந்திரசேகரனின் மகளான லவ்லின் சந்திரசேகரனும் , மேலும் ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

yogibabu44

இதைப்பற்றி யோகிபாபுவிடம் கேட்கையில், சுரேஷ் சங்கையா அவர்களின் ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை பார்த்த பிறகு அவர் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்தேன். தற்போது அது நிறைவேறி இருக்கிறது. டிஸ்னி+ஹாட்ஸ்டாருடன்  இரண்டாவது முறையாக கைக்கோர்த்துள்ளேன். இது வருங்காலத்திலும் நீடிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

மேலும் சுரேஷ் சங்கையா அவர்கள், எனக்கு இந்த வாய்ப்பு அளித்ததற்கு டிஸ்னி+ஹாஸ்டாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கண்டிப்பாக இப்படம் மக்கள் விரும்பும் வகையில் ஒரு விழிப்புணர்வு செய்தியோடு இருக்கும் என்று கூறினார்.

பின்பு  நடிகை லவ்லின் சந்திரசேகர் கூறுகையில், இது சுரேஷ் சங்கையாவின் அற்புதமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். இப்படத்தில் தைரியமான சுட்டி பெண்ணாக நடி க்கிறேன். இந்த வாய்ப்பு அளித்ததற்கு தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வி. தியாகராஜன் மற்றும் ஆர். ராமர் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்  பணியாற்ற உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...