ரஜினிகாந்த் முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் என்ன தெரியுமா?

ரஜினியின் அண்ணாத்தா திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10 உலகெங்கிலும் வெளியாகி சக்கை போடுப் போட்டு வருகிறது.

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். உலகெங்கிலும் வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் 100 கோடியை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 900 திரையரங்குகளில் வெளியான இந்த படம் 26 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அடுத்தடுத்து நாட்களில் படம் மேலும் வசூல் சாதனை படைத்து 1000 கோடி பாக்ஸ் ஆபிஸை தொடும் என திரைப் பிரபலங்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது ரஜினி ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். இந்த பயணம் முடிந்ததும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த்தின் அடுத்தப்படமான தலைவர் 170வது படத்திற்காக பிரபல இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்த்துள்ளார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜிடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து மாஸான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க ரஜினி ஆர்வமாக உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இன்று ஓடிடியில் வெளியாகும் மாவீரன் திரைப்படம்! தட்டு தடுமாறி வந்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் பல வெற்றி படங்களை ரஜினி கொடுத்தாலும் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ன தெரியுமா.. அது பில்லா திரைப்படம். மேலும் இந்த திரைப்படத்தை அஜித் ரிமேக் செய்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தான் ரஜினி முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் ரஜினிக்கு மாஸான ஹிட் கொடுத்து 25 வாரங்களுக்கு மேலாக ஓடி வசூல் சாதனை படைத்தது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...