மன அழுத்தம் மனிதனை ஆட்டிப் படைக்க காரணம் தெரியுமா?

நம் நாட்டில் மனநல கோளாறுகள் பெரும்பாலும் நம்முடைய மரபு சார்ந்த மனநிலையுடன் சேர்ந்து உருவாகிறது. சமூக நெறிமுறைகளுக்கு எதிராக போராடுவதோடு, சுற்றத்தாரால் வரும் பிரச்சனையை நினைத்து வருகின்ற ஒரு நோயாகும். சமீபத்தில், பல பிரபலமான நபர்கள் தாங்கள் எப்படி மன நிலை பிரச்சனையிலிருந்து வெளியேறினார்கள் என்று பேட்டிக் கொடுத்துள்ளனர்.

தன்மீது ஏட்பட்டுள்ள களங்கம் காரணமாக மனச்சோர்வு ஒருவரை அதிகமாக ஆட்டிப்படைக்கிறது. இதனை படிப்படியாக குறைக்க பெரும்பாலானோர் மனோதத்துவ மருத்துவரை நாடி செல்கின்றனர்.

மேலும், மனச்சோர்வு என்றால் என்ன? இந்த நோயைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் எது என பார்த்தால், மனசோர்வு என்பது  வெறுமனே சோர்வான மனநிலையில் இருப்பது மட்டும் அல்ல. ஏதோ ஆழமான ஒரு விசயம் ஆழ்மனதை ஆட்டிப்படைக்கிறது என்பதே அர்த்தம்.

‘டிப்ரசன்’ என்ற வார்த்தையானது பொதுவாக இந்த நாட்களில் மிக எளிதாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மருத்துவ முறைப்படி, இது மிகவும் எளிதாக சரிபண்ணக்கூடிய குறைபாடு ஆகும், இது ஒரு மனச்சோர்வு அல்லது பெரும் மன தளர்ச்சி சீர்குலைவு எனவும் குறிப்பிடப்படலாம். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது வருத்தமான, நம்பிக்கையற்ற அல்லது நம்பிக்கையற்றதாக உணர்கிறபோது மனச்சோர்வு ஏற்படுகிறது.

மனச்சோர்வு என்பது ஒரு மன நோய்தான் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் மனநிலை பாதிக்கப்படுவதால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. அவை செறிமானம், உறுதியற்ற தன்மை, தூக்க வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள், பசியின்மை, உடல் எடை மாற்றங்கள், உடலில் வலி, அமைதியற்ற தன்மை மற்றும் எரிச்சல் போன்ற சிக்கலை ஏற்படுத்தலாம்.

மனச்சோர்வு நிலை என்பது லேசானது அல்லது கடுமையானதாக இருக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு இந்த நோய் நீடிக்கிறது என்றால், அது ‘நிலையான மனச்சோர்வு நோயைக்’ குறிக்கிறது.  வேறு எந்த நோயையும் போல, மன அழுத்தம் யாருக்கும் ஏற்படலாம். எப்போதாவது, நீங்கள் அல்லது உங்களுடைய அன்புக்குரியவர்கள் இந்த அறிகுறிக்கு ஆளாகிறார்கள் என்று சந்தேகிக்கிறீர்கள் என்றால் அவரை உடனே மருத்துவரிடம் கூட்டிச்செல்லுங்கள்.

Published by
Staff

Recent Posts