தொப்பை மறைந்து கட்டான உடலை பெற ஒரே வழி இதுதான்…!

தொப்பை குறைந்தால் போதும். அழகாகி விடலாம் என்று பலரும் ஆசைப்படுவர்.

தொப்பை குறைய ஒரே வழி உடற்பயிற்சி தான். இதைத் தவிர்த்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதால் தான் தொப்பை வருகிறது. உடலில் எங்கெல்லாம் மூவ்மெண்ட் இருக்கிறதோ அங்கு கொழுப்பு சேராது.

thoppai
thoppai

அசையாத பாகங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு போய் கொழுப்பு சேர்ந்து விடும். அடிக்கடி மூச்சு இழுத்து விடும்போது அடிவயிறு வேலை செய்கிறது. இதனால் கொழுப்பு குறைந்து விடுகிறது. தொப்பையும் மறைந்து விடுகிறது.

வயிற்றில் ஒரு பெல்ட் போல கொழுப்பு சேர்ந்து விடுகிறது. ஸ்டின் டெஸ்ட் என்று ஒன்று உள்ளது. அதாவது உச்சந்தலையில் இருந்து கால் வரை நூலால் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டாக மடித்து வயிற்றை சுற்றுங்கள். கரெக்டாக ஒட்டினால் தொப்பை இல்லை. ஒட்டவில்லை என்றால் எவ்வளவு நூல் ஒட்டாமல் உள்ளதோ அவ்வளவு தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

என்ஆர்பிக் மெட்டாபாலிசம் என்பது உடலில் உள்ள குளுக்கோஸ் மட்டும் தான் சுழற்சியில் இருக்கும். இதனால் தான் பெரும்பாலான தாய்மார்களுக்கு தொப்பை போடுகிறது. அவர்களுக்கு கடினமான உடற்பயிற்சி என்று அதை எடுத்துக் கொள்ள முடியாது. ஒரே மாதிரியான வேலை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்.

ஆக்சிஜனை எடுத்து உடற்பயிற்சி செய்தால் தான் கொழுப்பானது கரையும். உடற்பயிற்சியில் 45 நிமிடங்களுக்கு மேல் செய்யும்போது தான் இந்த பயிற்சி உடலுக்குள் நடக்கும்.

plank
plank

விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் செய்யும் உடற்பயிற்சியானது முதல் பத்து நிமிடங்களுக்குள் செட்டாகி விடுவதால் மெட்டாபாலிசம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதனால் அவர்களுக்கு தொப்பை வருவதில்லை. சூரியநமஸ்காரம் தினமும் செய்து வந்தாலே போதும். தொப்பை மறைந்து விடும். காலை 11 மணிக்குள் உடற்பயிற்சி செய்து முடித்து விட வேண்டும். அதற்கு மேல் செய்யாதீர்கள்.

காலையில் செய்யும் உடற்பயிற்சி தான் மிக மிக முக்கியம். இது நாள் முழுவதும் உங்களுக்கு உற்சாகத்தைத் தருவதால் தொப்பை வருவதில்லை. சைக்ளிங் பண்ணினால் வெயிட் குறையும். தொப்பைக்கு பிளாங்க் எனப்படும் உடற்பயிற்சியை தினமும் செய்து வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.