ஹிட் பட இயக்குநர் வாழ்வில் வீசிய புயல் : படுக்கையில் மனைவி.. துரித நடவடிக்கை எடுத்த அரசு

பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற  திரைப்படங்கள் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது Skip பண்ணாமல் பார்க்காத ரசிகர்களே இல்லை. தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான, நட்பு, பெண் பெருமை, அழகான காதல் போன்ற அனைத்தையும் ஒரு சேர தனது படங்களில் புகுத்தியவர் இயக்குநர் விக்ரமன்.

எஸ்.ஏ. ராஜ்குமார், விக்ரமன் கூட்டணியில் உருவான படப் பாடல்கள் என்றுமே எவர்கிரீன் கிளாசிக் ஹிட் பாடல்களாக அமைந்திருக்கும். ஆரம்ப காலங்களில் விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக உருவாகக் காரணமாக இருந்தவர் இயக்குநர் விக்ரமன்.

இயக்குநர் பார்த்திபனிடம் உதவியாளராக இருந்த விக்ரமன் புது வசந்தம் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். பின்னர் தொடர்ச்சியாக பல ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இவருடைய படங்களில் பெரும்பாலானவை 100 நாட்களைக் கடந்து ஓடியவை. தற்போது தமிழ் திரையுலக இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

விக்ரமன் மனைவிக்கு ஏற்பட்ட நோய்

அமைதியாக சென்று கொண்டிருந்த இவர் வாழ்வில் திடீரென புயல் வீசியது. விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்தார். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தவறானதாக மாறி இன்று கால்களையே அசைக்க முடியா நிலையில் என் மனைவி இருப்பதாக அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் மனைவியை கவனித்துக் கொள்வதற்காகவே தான் படங்கள் இயக்குவதை நிறுத்தியதாகவும், சொத்துக்களை விற்றுதான் மனைவியின் சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் அதில் கூறியிருந்தார்.

Vikraman Wife

விக்ரமனின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் முதல்வர் கவனத்திற்குச் சென்றது. உடனே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை தொடர்பு கொண்டு இயக்குநர் விக்ரமன் மனைவிக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

அதன்படி நேற்று உடனடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன் 20-க்கும் மேற்பட்ட மருத்துவர் குழுவுடன் விக்ரமன் இல்லத்திற்குச் சென்று மனைவி ஜெயப்பிரியாவின் நிலைமையை கேட்டறிந்து மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். இது குறித்து விக்ரமன் கூறுகையில் எனது மனைவியின் நிலை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews