“எனக்கு மொட்டை மாடி போதும்..“ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த செயல்.. நெகிழ்ந்து போன எஸ்.பி.முத்துராமன்

சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் என்பது அனைவருக்கு தெரியும். ஒருபக்கம் ரஜினியிடமிருந்து கே.பாலச்சந்தர் நடிப்பினை வாங்க ஆனால் அவரை பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனையே சேரும். ஏவிஎம்-ன் ஆஸ்தான இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் ரஜினியை வைத்து மட்டும் கிட்டதட்ட 25 படங்களை இயக்கியிருக்கிறார். ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய பெருமை இவரையே சாரும். இதேபோல் கமலுக்கு அதிக படங்களைக் கொடுத்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

பாலசந்தர்கூட ஒருமுறை, ‘சிவாஜிராவ் என்ற வைரத்தை கண்டு பிடித்தேன். ரஜினிகாந்த் என்று பெயர் வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினேன். என்னைவிட முத்துராமன் சார் தான் ரஜினிக்கு பலவிதமான கதாபாத்திரங்கள் தந்து அந்த வைரத்தை பட்டைத்தீட்டினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வில்லனாக நடித்து வந்த ரஜினியை முதன் முதலாக பாஸிடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த படம் தான் புவனா ஒரு கேள்விக்குறி. சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ரா நடித்திருந்தனர். இந்தப் படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என இரு ஃபிலிம்பேர் விருதுகளை வென்றது. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படமாக இது அமைந்தது.

இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ஆறிலிருந்து அறுபது வரை படம் ரஜினியின் நடிப்புக்கு முள்ளும் மலரும் போல பெயர் சொல்லும் படமாக அமைந்திருந்தது. மேலும் முரட்டுக்காளை, ராஜா சின்ன ரோஜா போன்ற ஹிட் படங்களையும், கமலுக்காக சகலகலா வல்லவன் என்ற வசூல் சாதனைப் படத்தையும் கொடுத்து ஜனரஞ்சக இயக்குநராகத் திகழ்ந்தார் எஸ்.பி.முத்துராமன்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள தடாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது ஒரு பாடல் காட்சி. இதற்காக நடன கலைஞர்கள், முத்துராமன், ரஜினி ஆகியோர் அங்கு சென்றனர். ஒரேநாளில் அந்த காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தார் முத்துராமன். ஆனால், சில காரணங்களால் அப்படி எடுக்க முடியவில்லை.. இதற்காக மீண்டும் சென்னைக்கு போய் மீண்டும் நாளைக்கு திரும்பி வர முத்துராமனுக்கு விருப்பமில்லை.

அஸ்தமனமாகும் சென்னை உதயம் தியேட்டர்.. முடிவுக்கு வரும் 40 ஆண்டு திரைப் பயணம்

எனவே, அருகில் உள்ள சிறிய டீக்கடையில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு, ஒருவீட்டின் மொட்டை மாடியில் எல்லோரும் படுத்துவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு போய் விடுவோம் என நினைத்தார். ஆனால், ரஜினியை அப்படி தங்க வைக்க முடியாது என்பதால் ‘நீங்கள் மட்டும் சென்னை போய்விட்டு நாளைக்கு வாங்க’ என சொல்ல ரஜினி சென்னை போக மறுத்துவிட்டாராம்.

நான் மட்டும் என்ன ஸ்பெஷல். நானும் உங்களுடனேயே இருக்கிறேன். அந்த வீட்டின் மொட்டை மாடியில் மூலையில் ஒரு இடம் கொடுத்தால் போதும் என சொல்லிவிட்டு அங்கேயே தூங்கி எழுந்து அடுத்தநாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி இருக்கிறார்கள். இவ்வாறு இயக்குநர்களின் நடிகராக அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தானும் எளிமையைப் பின்பற்றியதால் தான் இன்றுவரை சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews