தள்ளிப்போகும் கேம் சேஞ்சர் : என்னது இன்னும் 1 வருஷம் ஆகுமா?

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 2.0, இவரின் அடுத்த படம் எப்போது வெளியாகும் என்ற சூழலில் இந்தியன் 2 படத்தினை ஆரம்பித்தார். இடையில் கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போக அடுத்த வருடம் ஏப்ரலில் படம் திரைக்கு வரும்என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் நீளம் அதிகமானதால் அதையும் இரண்டாகப் பிரித்து இந்தியன் 3 ஆகவும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தியன் முதல் பாகம் போன்று இந்தியன் 2-ன் அறிமுக வீடியோ இல்லை என கருத்துக்கள் ஒருபக்கம் போய்க் கொண்டுதான் இருக்கிறது.

இந்தியன் படத்தை ஏ.ஆர்.ரகுமானின் இசை தாங்கிப் பிடித்தது. மொத்த படத்தையே தன் தோளில் சுமந்து பிரம்மாண்ட வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஏ.ஆர்.ரகுமான். மேலும் இந்தியன் 2 அனிருத்தின் இசை அவ்வளவாக எடுக்கவில்லை எனவும், உலக  நாயகனை மிகவும் சாதாரணமாக டிரைலரில் காட்டியிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நாயனாக ராம் சரண் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் ஷுட்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கும் ஷங்கர் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு அடுத்தகட்ட படப்பிடிப்புக்குத் தயாராகி விட்டார்.

சிரஞ்சீவிக்கு இவ்வளவு பெரிய மனசா? பொன்னம்பலம் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்

மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே 90 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாம். இதனால் கோலிவுட் முதல் பாலிவுட் வரை வாயடைத்துப் போயிருக்கிறது. பான் இந்தியா படமாக கேம்சேஞ்சர் உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்து டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. அதன்படி அடுத்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என படக்குழு யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் பான் இந்தியா படமாக இருப்பதால் வட மாநிலங்களிலும் தீபாவளியையொட்டி ரிலீஸ் செய்தால் நல்ல கலெக்சனை அள்ளலாம் என திட்டமிடப்பட்டு வருகிறது.

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ராம் சரணுடன் இந்தி நடிகை கியாரா அத்வானி  ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா, நவீன் சந்திரா, சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

Published by
John

Recent Posts