சிரஞ்சீவிக்கு இவ்வளவு பெரிய மனசா? பொன்னம்பலம் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்

வித்தியாசமான முக பாவனைகளாலும், ஹீரோக்களை அடித்து உதைக்கும் காட்சிகளிலும் ரியலாகவே சண்டைதான் போடுகிறார்களா என்று நம்ப வைக்கும் அளவிற்கு நடிப்பவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த பொன்னம்பலம் மைக்கேல் மதன காமராசன், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களின் மூலம் திரையில் நடிகராக அவதாதாரம் எடுத்தார். அப்போது உள்ள வில்லன்கள் ரகுவரன், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களுக்கு மத்தியில் தனது ஆஜானுபாகுவான உடல் அமைப்பினால் திரையில் ரசிகர்களை மிரட்டி கவர்ந்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை படம் பொன்னம்பலத்திற்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது. இதில் இவர் பேசும் தாய்க்கெழவி என்ற வசனம் இன்றும் பிரபலமாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திப் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த பொன்னம்பலம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகினார். இதனால் கிட்னி பாதிப்படைந்த இவர் தனது சொத்துக்களை எல்லாம் விற்று சிகிக்சை மேற்கொண்டிருக்கிறார்.

எனினும் எந்த பலனும் அளிக்காத நிலையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தும் சிகிச்சைக்கு செலவான நிலையில் மேற்கொண்டு பண உதவிக்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு போன் மூலம் உதவி கேட்டிருக்கிறார். உடனே மனமிறங்கிய சிரஞ்சவி பொன்னம்பலத்திற்கு 45 இலட்சம் சிகிக்சைக்காக கொடுத்து உதவியிருக்கிறார்.

தேசபக்தி படத்துக்கே வரிவிலக்கு கொடுக்கல..! படத்துல இருந்த குறை இதுதானாம்.. அர்ஜுன் ஆதங்கம்

பேட்டி ஒன்றில் பொன்னம்பலம் கூறும் போது உதவி கேட்ட போது சிரஞ்சீவி சார் உடனடியாக என்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்று சேருமாறும், அனைத்து சிகிச்சை செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். மேலும் தனக்கு 1இலட்சம் அல்லது 2 இலட்சம் கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் இந்த உதவியை என்றென்றும் மறக்க இயலாது எனவும், மருத்துவமனையில் நுழைவுக் கட்டணம் கூட தான்செலுத்த வில்லை எனவும் அந்தப் பேட்டியில் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.

சக நடிகருக்கு உதவிய சிரஞ்சிவீயின் இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இவரின் மகன் RRR புகழ் ராம் சரண் தற்போது இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராம் சரண் மனைவியும் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.