பொழுதுபோக்கு

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட தமிழ்ப்படங்கள்

தமிழ்ப்படங்களில் கதைகளைத் தேர்ந்தெடுத்தும், இயக்குனர்களைத் தேர்ந்தெடுத்தும் சில தயாரிப்பாளர்கள் படங்களைத் திறம்படத் தயாரிப்பார்கள். அவை அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று விடும். அந்த வகையில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

அவர்களில் இயக்குனரே தயாரிப்பாளராகவும் மாறும்போது அந்தப் படமும் கூடுதலான எதிர்பார்ப்பைக் கொண்டு வந்து சேர்க்கும். அதே போல படமும் சிறந்த படமாக அமைந்து விடுகிறது. இயக்குனர் ஷங்கர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமாக எஸ் பிக்சர்ஸை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் தயாரித்த சில படங்களைப் பார்ப்போம்.

அறை எண் 305ல் கடவுள்

Arai enn 305il kadavul

2008ல் வெளியான படம். சிம்புதேவன் இயக்கியுள்ளார். படத்தில் பிரகாஷ்ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு, ஜோதிமயி, மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்தியாசாகர் இசை அமைத்துள்ளார்.

நகைச்சுவை கலந்த ஒரு மசாலா படம். ரசிகர்கள் சுவாரசியமான இந்தக் கதைக்கு பெரும் வரவேற்பு கொடுத்து வெற்றி பெறச் செய்தனர். குறை ஒன்றும் இல்லை, தென்றலுக்கு நீ, காதல் செய் ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி

IA23P

2006ல் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான படம். இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தின் பெயரே ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து விட்டது. அதிலும் வடிவேலு போஸ்டரில் கம்பீரமாக மீசையை முறுக்கி விட்டபடி இருந்தமையால் அந்த இம்சை அரசன் எப்படித் தான் இருப்பான் என்று பார்த்து விட்டு வருவோமே என்று பெரும்கூட்டம் திரண்டு திரையரங்கிற்கு வந்தது.

படமும் சிறந்த நகைச்சுவை படமாக அமைந்து விட்டது. காட்சிக்கு காட்சி வடிவேலு பின்னிப் பெடல் எடுத்திருந்தார். வடிவேலு புலிகேசியாகவும், உக்கிரபுத்தனாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து ஜமாய்த்திருந்தார். சபேஷ் முரளியின் இசையில் பாடல்கள் செம மாஸ். வடிவேலுவுடன் தேஜாஸ்ரீ, மோனிகா, நாசர், மனோரமா, நாகேஷ், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர்.

வெயில்

Veyil

2006ல் வெளிவந்தது. வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் பசுபதி பிரமாதமாக நடித்துள்ளார். உடன் பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி, மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இதுதான் முதல் படம்.

கல்லூரி

Kalloori

2007ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். அகில், தமன்னா, பரணி, மாயா ரெட்டி, சைலதா, பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தருமபுரியில் 2000த்தில் நடந்த பஸ் எரிப்பு வன்முறை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

காதல்

2004ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். ஷங்கரின் தயாரிப்பில் வெளியான படங்களில் மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் இதுதான். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். அந்த ஆண்டின் பிலிம்பேர் விருதையும் இந்தப் படம் பெற்றுள்ளது. பரத், சந்தியா, சுகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் காதல் மிக மிக யதார்த்தமாகக் காட்டப்பட்டு இருக்கும்.

நா.முத்துக்குமார் பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார். எல்லாமே சூப்பர் டூப்பர்ஹிட். பூவும் புடிக்குது, இவன் தான், தண்டாத்தி கருப்பாயி, தொட்டுத் தொட்டு, புறா கூண்டு, கிறு கிறு, உனக்கென இருப்பேன், காதல் ஆகிய பாடல்கள் அனைத்தும் தேன் சிந்தும் ரகங்கள்.

ஈரம்

Eeram

இப்படி ஒரு த்ரில்லர் படத்தை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. படத்தில் வில்லன் தண்ணீர் தான். அருமையான திரைக்கதையைக் கொண்ட படம். 2009ல் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் வெளியான படம். ஆதி, நந்தா, சிந்துமேனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Published by
Sankar

Recent Posts