இயக்குனர் நெல்சன் ஒரு விஜய் டிவி பிரபலமா.. நெல்சன் குறித்து வாயை பிளக்கும் ரகசிய அப்டேட!

2017 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கிய 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த விழாவின் நிகழ்ச்சி இயக்குனராக அதாவது சோ புரொடியூசர் ஆக இருந்து வெற்றிகரமாக நடத்தியவர் வேறு யாருமில்லை, தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வெற்றியடைய செய்துள்ள நெல்சன் எனப்படும் நெல்சன் திலீப் குமார் தான்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தின் இசை வெளியீட்டு விழாவை மேற்பார்வை செய்த நெல்சன் இன்று ரஜினியை வைத்து படம் எடுத்துள்ளார் என்றால் அது உச்சம் தொடும் வளர்ச்சி தான்.

1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி சினிமா பின்புறம் இல்லாத நடுத்தர குடும்பத்தில் வேலூரில் பிறந்தவர் நெல்சன். பள்ளி படிப்பை வேலூரில் முடித்து சென்னை நியூ காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் எனப்படும் விஸ்காம் துறையில் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே மீடியா துறையில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த நெல்சன் சினிமாவில் உதவி இயக்குனராக சேர பெரும் முயற்சி எடுத்தும் வாய்ப்பு கிடைக்காததால் கல்லூரியில் தனது சீனியர்கள் மூலம் விஜய் டிவியில் அசிஸ்டன்ட் ஸ்கிரிப் ரைட்டராக வேலைக்கு சேர்ந்தார்.

அவரது டைமிங் காமெடி வசனங்கள் பலரையும் ஈர்த்தது. அதன் பின் படிப்படியாக விஜய் டிவியில் அங்கீகாரம் பெற்றவர் ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி ஷோக்களையும் அழகி, கனா காணும் காலங்கள் போன்ற தொடர்களையும் இயக்கினார். அதோடு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் சோ புரொடியூசர் ஆக சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியவருக்கு விஜய் டிவியில் பெரும் பொறுப்பு தானாகவே தேடிவந்தது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இயங்கும் வாய்ப்பை பெற்ற நெல்சன் அதில் சிறப்பாக செயல்பட்டு கமலிடமும் பாராட்டு பெற்றார். இதை அடுத்து சின்னத்திரையில் புகழ் பெறும் கலைஞர்கள் சினிமாவிற்கு செல்ல முயற்சிப்பது போலவே நெல்சன் சினிமாவிற்குள் நுழைய முடியும் என நம்பினார்.

அதன் பலனாக நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் வேட்டை மன்னன் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். படத்திற்கான பூஜை போடப்பட்டு சூட்டிங் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான நீட் கார்ட்ஸ் சக்கரவர்த்தி பெரும் பொருளாதார நெருக்கடியை சிக்கிக் கொள்ளவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதனால் படத்தின் சூட்டிங் மீண்டும் தொடங்காததால் அனிருத்தின் ஸ்டூடியோவில் பொழுது போக்கி வந்தார் நெல்சன். அப்போது நெல்சனின் காமெடி சீன்ஸ் ஸ்டோரி நாலேஜ் போன்றவற்றை நாளடைவில் உணர்ந்த அனிருத் ஏதாவது கதையை யோசிங்களேன் என்று கூற இரண்டு மாதங்களில் கோலமாவு கோகிலாவுடன் தயாரானார் நெல்சன்.

ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் அனிருத்திற்கு நெருக்கமான நட்பு இருந்ததால் அவர் நயன்தாராவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி நெல்சனை கதை சொல்ல அனுப்பியுள்ளார். நயன்தாராவிற்கும் கதை பிடித்து விட லைக்கா தயாரிப்பில் அந்த படம் உருவாகி பெரும் வெற்றியை பெற்றது.

விஜய் டிவியில் வேலை பார்த்தபோது ஆங்கர் ஆக இருந்த சிவகார்த்திகேயனுடன் நெருங்கிய நட்பு இருந்ததால் அவர் ஹீரோவாக நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். அந்த படத்தின் மாபெரும் வெற்றி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன்.

நடிகர் அஜித்துக்கு மட்டும் இத்தனை பட்ட பெயரா.. இவளோ நாள் இது தெரியாம போச்சே!

வசூலில் அந்த படம் வெற்றி அடைந்தபோதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் கடுமையான கிண்டலுக்கு ஆளானார் நெல்சன். பீஸ்ட் படத்தின் சூட்டிங்கின் போதே ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனத்தால் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்குவதே கேள்விக்குறியானது.

பலரும் ரஜினி இடம் நெல்சனை தவிர்த்து விட அறிவுரை கூறியபோதும் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரை அழைத்த ரஜினி நெல்சனின் ஜெயிலர் கதையில் சில மாற்றங்கள் செய்து மேற்பார்வை செய்ய சொல்லி அவரது உதவியை நாடவே இறுதியான ஜெயிலர் ஸ்கிரிப்ட் உருவாகி சூட்டிங் நடைபெற்றது.

நெல்சனுக்கு மோனிஷா என்பவர் உடன் திருமணம் நடைபெற்று ஆத்விக் என்கிற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Velmurugan

Recent Posts