விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. வேற எந்த ஹீரோவா இருந்தாலும் யோசிச்சுருப்பாங்க.. கலங்கி போன இயக்குனர்!

கேப்டன் என்ற பெயரைக் கேட்டாலே நமக்கு முதலில் ஞாபகம் வரும் முகம் என்றால் அது நிச்சயம் நடிகர் விஜயகாந்த் தான். இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகனாக அறிமுகமான விஜயகாந்த், 80, 90 களில் சிறந்த நடிகராகவும் வலம் வந்தார்.

அது மட்டுமில்லாமல், விஜயகாந்த் படம் என்றாலே அதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். மேலும், நாட்டுக்காக சண்டை போடும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜயகாந்த், போலீஸ் அதிகாரி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் தோன்றி மக்கள் மனம் கவர்ந்தவர். இது போக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை போல, மக்களுக்காக வரும் அரசியல் கதைகள் சார்ந்த திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்து வந்த விஜயகாந்த், அதன் பின்னர் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து தன்னை விலக்கி கொண்டு முழு நேர அரசியல்வாதியாகவும் உருமாறினார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த், 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியில் வெற்றி பெறவும் செய்தார். தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார்.
vijayakanth old pic

இன்று தமிழக அரசியலில் மிக முக்கிய பிரமுகராக விஜயகாந்த் மாறி இருக்க வேண்டிய சூழலில், பல விஷயங்கள் அவரை அப்படியே உருக்குலைய வைத்தது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலையில் மிக மோசமாக இருந்து வரும் விஜயகாந்த், பெரிய அளவில் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். பிறந்தநாளில் மட்டும் கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றும் விஜயகாந்த், மிகவும் மெலிந்து போய் காணப்பட்டது அனைவரையும் மனம் நொறுங்க வைத்திருந்தது.

அடிக்கடி கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகி, இணையவாசிகளை அதிர்ச்சி அடைய வைக்கும். இந்த நிலையில், தற்போது வெளியான மருத்துவமனை அறிக்கையின் படி, அவர் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாகவும் தொடர் சிகிச்சை அவருக்கு தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இனி வரும் நாட்களில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சினிமாவில் கருப்பு எம்.ஜி.ஆர் என பாராட்டப்படும் விஜயகாந்த், ஏராளமான மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார். மிகவும் சிறந்த உள்ளம் கொண்ட விஜயகாந்த் குறித்த பல்வேறு சிறந்த காணொளிகள் தற்போது இணையத்தில் உருக்கத்துடன் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றை குறித்து தற்போது காணலாம்.
Vijayakanth birthday pic

நந்தகுமார் இயக்கத்தில் உருவான ‘தென்னவன்’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் போது நடந்த சம்பவம் ஒன்றை குறித்து இயக்குனர் நந்தகுமார் விவரிக்கிறார். அதன்படி, தென்னவன் படத்தில் ஒரு ரிஸ்க்கான சண்டைக்காட்சிக்காக விஜயகாந்திற்காக டூப் ஒன்றை படக்குழுவினர் தயார் செய்துள்ளனர். இதனை அறிந்த விஜயகாந்த், டூப் வேண்டாம் என கூறியதுடன் நான் கைத்தட்டு வாங்க இன்னொரு உயிரை பணயம் வைக்க வேண்டுமா என கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, டூப் இல்லாமல் அந்த காட்சியை விஜயகாந்த் நடித்திருப்பார்.

எந்த ஹீரோவும் யோசிக்க தயங்கும் ஒரு விஷயத்தை விஜயகாந்த் துணிச்சலுடன் முடிவெடுத்து மனித நேயத்துடன் செய்த சம்பவம், பலரையும் கலங்க வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.