மனோபாலா செய்த அந்த ஒரு உதவியால் பாரதிராஜா கண்ணில்பட்டு ஹீரோவான நிழல்கள் ரவி!

தமிழ் சினிமாவில் எத்தனையோ குணச்சித்திர நடிகர்கள் இருந்தாலும் தனக்கென தனி பாணியைக் கடைப்பிடித்து ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என அனைத்து ஏரியாவிலும் இறங்கி அடிப்பவர் தான் நிழல்கள் ரவி. பாரதிராஜா இயக்கத்தில் 1980 ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரவிச்சந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட நிழல்கள் ரவி. கோவையில் பிறந்த நிழல்கள் ரவி நடிப்பு ஆசையில் சென்னை வந்திருக்கிறார். நிழல்கள் படத்திற்கு முன்னதாக ஒரு படம் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப்படம் பாதியிலேயே கைவிடப்பட பாரதிராஜா அலுவலகம் நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்திருக்கிறார்.

இப்படி அடிக்கடி அவர் அலுவலகத்திற்கு சென்ற அவர் ஒருமுறை சிவப்பு ரோஜாக்கள் பட ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனியாக இருந்த பாரதிராஜாவிடம் சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறார். மறுநாள் வருமாறு பாரதிராஜா சொல்ல, அதன்பின் நண்பரான மனோபாலாவை சந்திருக்கிறார் நிழல்கள் ரவி. அப்போது மனோபாலா செய்த பேருதவி இன்று அவரை இந்த இடத்திற்கு கொண்டு வர வைத்திருக்கிறது. பாரதிராஜா தனது அடுத்த படத்திற்காக வேலையில்லா பட்டதாரி இளைஞர் கதாபாத்திரத்திற்காக புதுமுக நடிகர்களை தேர்வு செய்து கொண்டிருந்தார். அதன்படி நிழல்கள் படத்திற்காக மனோபாலா நிழல்கள் ரவிக்கு வேலையில்லா பட்டதாரி போன்றதொரு போட்டோ ஷூட் நடத்தில் அவரிடம் புகைப்படங்களைக் கொடுத்து பாரதிராஜாவை சந்திக்குமாறு கூறியிருக்கிறார்.

கடவுள் பற்றி கமல் சொன்ன தசாவதாரம் பட வசனம்.. எங்க இருந்து சுட்டது தெரியுமா?

நிழல்கள் ரவியும் பாரதிராஜாவைச் சந்தித்து புகைப்படங்களைக் காட்ட, உடனே பாரதிராஜாவுக்கு பிடித்துப் போய் விட்டது. மேலும் நடிப்பு அனுபவம் இருக்கிறதா என்று பாரதிராஜா கேட்டிருக்கிறார். அனால் நிழல்கள் ரவி தான் முன்னர் நடித்து இடையில் நின்ற படத்தைப் பற்றி எதுவும் கூறாமல் நடிப்பு அனுபவம் இல்லை என்று கூறியிருக்கிறார். பின்னர் நிழல்கள் பட ஷூடிங் ஆரம்பமானது. ‘பூங்கதவே தாழ் திறவாய்..’ பாடலுக்கு நிழல்கள் ரவி காட்டிய முக பாவனைகளைக் கண்டு பாரதிராஜா மெய்சிலிர்த்து போய் தட்டிக் கொடுத்திருக்கிறார். அதன்பின் அவரின் முதல் பட அனுபவத்தைப் பற்றி யாரோ ஒருவர் சொல்ல அதை பாரதிராஜா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இவ்வாறு மனோபாலாவின் போட்டோ ஷூட் மூலம் நிழல்கள் படத்தில் அறிமுகமான ரவி அந்த படத்தின் பெயராலேயே இன்று அறியப்படுகிறார். இன்று தமிழ் சினிமாவில் நாசர், விஜயகுமார் போன்றோர் வரிசையில் நிழல்கள் ரவியும் 500 படங்களுக்கு மேல் நடித்து சிறந்த குணச் சித்திர நடிகராகத் திகழ்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...