அடேங்கப்பா…! இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தமிழ் திரையுலகில் இயக்குநர் விக்ரமனின் புதுவசந்தம் படம் மூலம் இணை இயக்குநராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். திருத்தணியைச் சேர்ந்த இவர் தொடர்ந்து பல படங்களில் பாரதிராஜா உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ரகுவரன்  நடித்த புரியாத புதிர் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். பின்னர் சேரன் பாண்டியன் படம் இவருக்கு ஹிட் கொடுத்த நிலையில் நடிகர் சரத்குமாருக்கும் இவருக்கும் ஒரு ராசி உண்டு. இந்தக் கூட்டணி மட்டும் சுமார் 12 படங்களுக்கு மேல் இணைந்துள்ளார். அதில் ஒரு சில படங்களைத் தவிர அனைத்துமே வெற்றிதான்.

நாட்டாமை தந்த வரவேற்பு

கே.எஸ்.ரவிக்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது நாட்டாமைதான். இந்தப் படத்தின் காமெடி காட்சிகள், திரைக்கதை என ஒவ்வொரு அங்குலத்தையும் செதுக்கியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடிய நாட்டாமை சரத்குமாருக்கும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைக் கொடுத்தது.

அதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமார்  சூப்பர் ஸ்டார் கூட்டணியில் உருவான படையப்பா தமிழ் சினிமாவில் இதுவரை  எந்த ஒரு படமும் செய்யாத சாதனைகளை செய்தது. பின்னர் முத்து படமும் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டிலும் ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரை பிரபலப்படுத்தியது. மீண்டும் ரஜினியை வைத்து இயக்கிய லிங்கா படமும் கூடுதல் இயக்குநர் பொறுப்பேற்ற கோச்சடையான் படமும் சுமாரான வெற்றியை பெற்றன.

அதிசயமே அசந்து போகும் அழகு : 50 வயதிலும் 20 வயது இளமையில் ஜொலிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்

அதன்பின் உலகநாயகனுடன் அவ்வை சண்முகி, தெனாலி, தசாவதாரம் என வெற்றிமேல் வெற்றிகளைக் கொடுக்க இயக்குவதை நிறுத்தி விட்டு நடிப்பில் பிஸியானார். தான் இயக்கும் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் கே.எஸ். ரவிக்குமார் பின்னர் முழுநேர  நடிகராகத் தொடங்கினார்.

பரம்பரை பணக்காரர்

என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் கே.எஸ். ரவிக்குமார் குடும்பம் பின்னணி இயல்பிலேயே பரம்பரை பணக்கார குடும்பம். சென்னை பெரும்பாக்கத்திற்கு அருகில் நூக்கம்பாளையம் எனும் ஊரில் 100 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட அவர்களது பூர்வீக சொத்தில் தான் BSCPL கட்டுமான நிறுவனத்தால் பொல்லினேனி ஹில்சைடு எனும் நகரியம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெயிலர் எல்லாம் ஒதுங்கி நில்லு!.. கில்லியாக வசூல் அள்ளிய விஜய்.. இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லியோ!

மேலும் சென்னையிலேயே மிகப்பெரிய கேட்டட் கம்யூனிட்டி இதுதான். இதுமட்டுமல்லாது மலையடிவாரத்தில் KS ரவிகுமார் குடும்பத்திற்கு சொந்தமான மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமும் உள்ளதாக தகவல் உள்ளது.

இயக்குநர் சேரன் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இயக்குனரானார் என்பது கூடுதல் தகவல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...