முக்கிய அரசியல் தலைவர் பயோபிக்-ல் சரத்குமார்… இயக்கும் முக்கிய இயக்குநர்

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பல முக்கிய புள்ளிகள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்துவருவது சமீபத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் ராமாயணம், மஹாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற புராதன கதைகளையே படமாக எடுத்து வந்தனர். அதன்பின் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், பெரியார், காந்தி, அம்பேத்கர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தனர்.

அதற்கு அடுத்த தலைமுறை இளம் வயதில் சாதித்த விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீரர்கள் போன்றறோரின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் ஆக திரைப்படமாக எடுத்து அவர்கள் சாதனைக்கு எந்த அளவிற்கு உழைத்தார்கள் என்பதை எடுத்துக் காட்டி வருகின்றனர்.

தற்போது அந்த டிரெண்ட்டில் இப்போதுள்ள அரசியல்கட்சித் தலைவர் இணைந்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தான்.  ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து மருத்துவக் கல்வி பயின்று மருத்துவர் ஆன அவர், எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்ததன் மூலம் சமூகத்தில் நற்பெயர் பெற்றார்.

அரசியல்ல பரம எதிரி.. தொழில்ல செம போட்டி.. ஆனாலும் இணைபிரியாத இரு ஆளுமைகள்

அதன்பின் வன்னியர் இனத்தவரின் சாதி சங்கத் தலைவராக இருந்து பல போராட்டங்களுக்குப் பின் இட ஒதுக்கீட்டைப் பெற்று பின்னர் அரசியலில் நுழைந்து மதுவிலக்கை வலியுறுத்தி இன்று வரை போராடி வருகிறார். இவர் வாழ்வில் பட்ட அனுபவங்களைத் திரைப்படமாக எடுக்கப் போவதாக செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது.

தமிழ்நாட்டில் சாதி சர்ச்சையை பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கிவருபவர்தான் சேரன். தற்போது இராமதாஸின் பயோபிக்-ஐ இவர் இயக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இராமதாஸாக சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் சேரன் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள JOURNEY வெப்சீரீஸ் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.