வெறும் ஒன்..டூ..த்ரீயால் இப்படி ஒரு ஹிட் பாட்டா? சின்ன உதட்டசைவால் மெகாஹிட் ஆன பாடல்..

இயக்குநர் பாரதிராஜா தனது சிஷ்யனான பாரதிராஜாவை ஹீரோவாக்கி தனது தயாரிப்பிலும், இயக்கத்திலும் எடுத்த படம்  தான் புதிய வார்ப்புகள். 1979-ல் வெளிவந்த இந்தத்திரைப்படத்தில் பாக்யராஜூடன், ரதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்காக பாரதிராஜா முதலில் ஹீரோவாகத் தேர்ந்தெடுத்தது இயக்குநர் கங்கை அமரனை. ஆனால் அப்போது அவரால் நடிக்க முடியாததால் தனது மாணவனை ஹீரோவாக்கி அரிதாரம் பூசினார் பாரதிராஜா. அதே சமயம், பாக்யராஜ் குரல் அந்த வாத்தியார் கேரக்டருக்கு சரியாக பொருந்ததாதால், கங்கை அமரன், பாக்யராஜூவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பார். இந்த படம் வெளியாக காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் மற்றுமொரு சிறப்பம்சம் இளையராஜா- கண்ணதாசன் கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 5 ஆண்டுகாலம் மட்டுமே திரைத்துறையில் ஒன்றாகப் பணியாற்றினர்.ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் காலத்தால் அழியாத பல காவியப் பாடல்களை உருவாக்கி வெற்றி கொடுத்தனர். அப்படி புதிய வார்ப்புகள் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் ‘வான் மேகங்களே.. வாழ்த்துங்கள்‘ என்ற கிளாசிக் ஹிட் பாடல்..

பாடலின் ஆரம்பத்தில்மணியோசையுடன் ஒலிக்கும் துவங்கும் வரிகள் நம்மை கேட்கும் போது உள்ளத்தில் பூரிக்கச் செய்யும். மலேசியா வாசுதேவனின் குரலும், ஜானகியின் குரலும் கேட்பவர்களை பரவசப்படுத்தும்.

குணாவின் மொத்த பாடலையும் 2 மணிநேரத்தில் முடித்த இசைஞானி.. ராஜாதி ராஜாதான் போல..

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தப் பாடல் படமாக்கப்பட்ட போது நாயகிக்கு தமிழ் தெரியாததால் பாடலின் வரிகளுக்கேற்ப வாயசைக்க மிகவும் கஷ்டப்பட்டராம். பல டேக்குகள் எடுத்தும் சரிவர அமையவில்லை. இதனால் பாரதிராஜா கதாநாயகி ரதிக்கு ஐடியா ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அது என்னவெனில் நீ இந்தப் பாடலுக்கு வாயசைத்து நடிக்கும் முன்பு ஒன்..டூ.. த்ரீ என்று மட்டும் பாடல் முழுக்க ஏற்ற இறக்கமாகச் சொல்லச் சொல்லியிருக்கிறாராம்.

நாயகியும் அப்படியே செய்ய பின்னர் ஓரளவிற்கு சரியாக வந்திருக்கிறது. ஆனால் இன்றும் இந்தப் பாடலின் வீடியோவை சற்று உற்றுக் கவனித்தால் நாயகி ரதி பாடலின் வரிகளுக்கு ஏற்ப அசைக்காது சற்று மாற்றி வாயசைப்பதைக் காணலாம். இருப்பினும் இந்தப் பாடல் கண்ணதாசன், இளையராஜாவின் மேஜிக்கால் இன்றளவும் கிளாசிக் ஹிட் பாடல்களின் லிஸ்ட்-ல் ஒன்றாக திகழ்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...