தமிழ் சினிமாவின் முதல் வெள்ளிவிழா படம்.. டைட்டில் கார்டில் இடம்பெற்ற ஒரு முக்கியமான பெயர்!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் என்பது தெரிந்த ஒன்று தான். அனால் எந்த படத்திற்காக வழங்கபட்டது தெரியுமா? இந்திய சினிமாவில் அதுவரை மௌன மொழி திரைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கதாபாத்திரங்கள் வசனம் ஏற்று நடிக்க ஆரம்பித்தனர்.

அவ்வகையில் இந்தியாவின் முதல் பேசும் படமாக ஆலம் ஆரா 1931-ல் வெளிவந்தது. அதே போல் தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’ ஆலம் ஆரா வெளிவந்த சில மாதங்களிலேயே வெளியானது. அதுவரை நாடக மேடைகளில் நடித்துக் கொண்டிருந்த கூத்துக்கு கலைஞர்கள் சினிமாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அடுத்தடுத்து பல திரைப்படங்கள் உருவாக ஆரம்பித்தது.

அந்தவகையில் தமிழில் பல படங்கள் வெளியான போதிலும் முதல் முதலாக சூப்பர் ஹிட் படமாக அமைந்தது பவளக்கொடி திரைப்படம் தான். மஹாபாரத கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட பவளக்கொடி படத்தில் கிருஷ்ணராக மணி பாகவதரும், கர்ணனாக தியாகராஜ பாகவதரும் நடித்திருந்தனர். இதில் பவளக்கொடி என்பது பாஞ்சலியைக் குறிக்கும்.

‘நாயகன்’ படத்தில் மிஸ் ஆன நடிகர் திலகம்.. கோட்டை விட்ட மணிரத்னம்.. தட்டி தூக்கிய தேவர் மகன்

1934-ல் வெளியான இந்தப்படம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. அந்தக் காலத்தில் திரையரங்குகளில் 275 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. மேலும் தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற நிலையை இந்த படத்தின் மூலம் பெற்றார். அதன் பிறகு இவரின் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளி கண்டு வரலாற்றில் அழிக்க முடியாத சாதனையை செய்தது. இந்திய சினிமாவே அப்போது தமிழகத்தை வியந்து பார்த்தது.

பவளக்கொடி படம் அப்போது எந்த வித நவீன தொழில்நுட்பக் கருவிகளும் இல்லாத காரணத்தால் சூரிய ஒளியிலேயே படம் பிடிக்கப்பட்டது. மேகமூட்டத்தால்  படப்பிடிப்பு தடைபடும். சாப்பாட்டு இடைவேளையில் திடீரென சூரியன் தோன்றினால் அப்படியே சாப்பாட்டை வைத்து விட்டு ஷூட்டிங் நடத்த ஆரம்பித்து விடுவார்களாம். மேலும் இந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் காக்கைகள் தொல்லை அதிகமாக இருந்ததால் தயாரிப்பளார் லட்சுமண செட்டியார் காக்கைகளை சுட்டுத் தள்ள ஜோ என்ற ஆங்கிலேயரை நியமித்தாராம். மேலும் டைட்டில் கார்டில் கூட CROW SHOOTER என்று அவரின் பெயரும் இடம்பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...