முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட கவிஞர் சினேகன்.. அதன்பின் அமீர் கொடுத்த வாய்ப்பால் பாடாலாசிரியராக மாறிய கதை

இன்றைக்கு சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்களே பல பாடல்களை எழுதும் சூழ்நிலைக்கு வந்துவிட்ட நிலையில் பல பாடல்களின் தரமானது குறைந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் தரமான தமிழில், அழகு நடையுடன் பொருள்படும்படி பாடல்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகிப் போனது. ஆனால் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை வைரமுத்து, வாலி, பா.விஜய், யுகபாரதி, சினேகன், தாமரை, அறிவுமதி போன்ற புகழ்பெற்ற பாடலாசிரியர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.

அந்த வகையில் கவிஞர் சினேகனுக்கு முதல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது தெரியுமா? பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சினேகன் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர். ஆசிரியர் படிப்பை முடித்து விட்டு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவருக்கு கவிதைகள், பாடல்கள் எழுதும் ஆற்றல் இயற்கையாகவே உண்டானது. எனவே சினிமாவில் பாடல்கள் எழுதும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற கவிஞர் வைரமுத்துவிடம் சிறிது காலம் உதவியாளராக இருந்திருக்கிறார்.

அதன்பின் சினிமாவில் பல்வேறு முகங்களில் அறிமுகம் கிடைக்க முதல் படமே இவருக்கு பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ஆம்.. இயக்குநர் பாலாவின் இரண்டாவது படமான நந்தா படத்தில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைக்க சினேகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். முதல் படமே இயக்குநர் பாலா, சூர்யா, யுவன்சங்கர்ராஜா என பெரிய கூட்டணி கிடைக்க அந்தப் படத்திற்காக பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இதெல்லாம் ஒரு கிளைமேக்ஸா..? நல்லாவே இல்லையே..! தூற்றியவர்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் விக்ரமன்..

அதன்பின் தினமும் ஷுட்டிங் ஸ்பாட் சென்று அங்கு நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டே எழுதவும் செய்திருக்கிறார். இப்படியே நாட்கள் போக திடீரென்று ஒருநாள் இவரை நந்தா படத்தில் இணை இயக்குநராக அப்போது பணியாற்றிய அமீர் சினேகனை அழைத்திருக்கிறார். இருவரும் ஒரு டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்த அப்போது அமீர் நந்தா படத்தில் உங்களது பாடல் பயன்படுத்தப்படவில்லை. வேறு பாடல்கள் வேறு கவிஞர்களால் எழுதி முடிக்கப்பட்டு விட்டது. மேற்கொண்டு உங்கள் பாடலைப் பயன்படுத்த அங்கு காட்சிகள் இல்லை என்று கூற மனதிற்குள் விம்மியிருக்கிறார் சினேகன்.

தனக்கு வந்த முதல் வாய்ப்பே இப்படி பறிபோனதை நினைத்து உருக, அமீர் அவரைத் தேற்றி நான் தனியாக படம் இயக்கும் போது கண்டிப்பா உங்களை அழைக்கிறேன் என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் நாட்கள் சென்றது. சினேகனும் பல்வேறு வகையில் முயற்சி செய்து சேரனின் பாண்டவர் பூமி படத்தில் பாடல்கள் எழுதினார். இப்படத்தில் 5 பாடல்களை எழுத பின் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு எழுத ஆரம்பித்தார்.

அப்போது ஒருமுறை இயக்குநர் அமீரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது சினேகனுக்கு. நெடுநாட்களுக்குப் பின் அமீரைச் சந்தித்த சினேகன் இருவரும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். அதன்பின் அமீர் தான் ஒரு படம் இயக்கப் போவதாகவும் அதில் நீங்கள் தான் பாடல்கள் எழுத வேண்டும் என்று சொல்ல உருவானது தான் மௌனம் பேசியதே படத்தின் பாடல்கள்.

இவ்வாறு அமீர் தான் இணை இயக்குநராக பாலாவிடம் இருந்த போது சிநேகனை அழைத்து தான் படம் இயக்கினால் பாடல் எழுதும் வாய்ப்பினை உங்களுக்கே தருகிறேன் என்று சொன்னதை மறக்காமல் அழைத்து அவ்வாறே பாடல்களை எழுதத் செய்து அனைத்து பாடல்களையும் சூப்பர்ஹிட்டாக மாற்றினார். இதன்பிறகு சிநேகன் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இப்படி ஆரம்பித்த இவர்கள் நட்பு இன்று மௌனம் பேசியதே படம் வெளிவந்து 22 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்னும் தொடர்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...