தமிழில் வித்தியாசமாக வந்த கமலின் பேசும் படம்



அந்த காலத்தில் அதாவது சினிமா வந்த காலத்தில் போதிய டெக்னாலஜி இல்லாத காலத்தால் மெளனப்படமாகவே படங்கள் வந்தது வரலாறு. சில காலத்திற்கு பின்புதான் சாதாரண ஒலியோடு கூடிய படங்கள் வர ஆரம்பித்தன. பின்பு வந்த தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசிகர் போன்றோரின் பாடல்கள் உள்ள படம் அதன் பின் வந்த சிவாஜி, ரஜினி , கமலின் படங்களால் தமிழ் சினிமா எவ்வளவோ உயரத்தை தொட்டு விட்டது.

கமல் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் தனது 100வது படமான ராஜபார்வையில் இருந்து கொஞ்சம் அதிகமாகவே வித்தியாசமான ரோல்கள் செய்வது, படங்களில் நடிப்பது கமலுக்கு கை வந்த கலை.

சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய ராஜபார்வையில் கண் தெரியாதவராக நடித்தார். அதே கூட்டணியில் கமல்ஹாசன் பேசும் படம் என்றொரு படம் நடித்தார்.

பேசும் படம் தானே பேச்சு அதிகமாக இருக்கும் என நினைத்தால் தவறு. படத்தில் பேச்சே இருக்காது. அதுவும் 80களில் புகழ்பெற்ற ஒரு ஹீரோ அப்படி நடித்தால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இருந்தாலும் கமல் மனம் தளராமல் அந்த முயற்சியை தொடர்ந்து முழுக்க முழுக்க எதுவும் பேசாமல் அமைதியான மெளனப்படமான பேசும் படத்தில் நடித்தார்.

இளையராஜா இசை, படம் முழுக்க இசையில் மட்டுமே நகரும் எந்த பேச்சும் இருக்காது. இது வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் நல்லதொரு முயற்சியாக வித்தியாசமாக இப்படம் பாராட்டப்பட்டது. ஹிந்தியில் இப்படம் புஷ்பக் எனவும் தெலுங்கில் இப்படம் புஷ்பக விமானம் எனவும் வந்தது.

இப்படியொரு வித்தியாசமான தமிழ் படம் வந்தது அப்போதும் சரி இப்போதும் சரி அரிதான ஆச்சரிய விசயம்தான்.

இப்படம் முழுக்க முழுக்க காமெடி கிரைம் கலந்து இருந்ததால் ரசிகர்கள் பலர் இப்படத்தை ஏற்றுக்கொண்டனர்.

சிங்கீதம் சீனிவாசராவ் இப்படத்தை இயக்கி இருந்தார்.

Published by
Staff

Recent Posts