தசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்


வேத காலத்தில் ஜமதக்கனி என்னும் முனிவர் காட்டில் ஒரு ஆசிரமம் கட்டி, அங்கு தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவருடைய தவ வலிமையால் சொர்க்கலோகத்துப் பசுவான காமதேனுவை தன்னுடைய ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார். அதைப்பார்த்த அந்த நாட்டு மன்னனான கார்த்தயார்ஜீனன் அந்த பசுவை தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்டார். அதோடு அதற்கு இணையான செல்வத்தைத் தருவதாகவும் ஜமதக்கினி முனிவரிடம் கூறினார். இதற்கு ஜமதக்கனி முனிவரோ காமதேனு பசுவை கொடுக்க மறுத்தார். கோபமுற்ற மன்னன் இந்த பசுவை முனிவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு சென்று விட்டார். மன்னனின் இந்த செயலால் கோபமுற்ற ஜமதக்கனியின் மகனான பரசுராமர் மன்னனைக் கொன்று அந்த பசுவையும் மீட்டு, மீண்டும் தந்தையிடம் கொடுத்தார். இதனால் பெரும் கோபங்கொண்ட, கார்த்தவீர்யாஜுனனின் மூன்று புதல்வர்களும் தன் தந்தையின்மரணத்துக்குக் காரணமான பரசுராமரின் தந்தையான ஜமதக்கனி முனிவரை 21 முறை வாளால் வெட்டிக் கொன்றனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்ட பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் அவனுடைய படைகளையும் அழிக்க நினைத்தார். அப்போதுதான் சிவபெருமான் தனக்கு பரிசாகக் கொடுத்த கோடரியைப் பயன்படுத்தி வெட்டி வீழ்த்தினார். 

ஜமதக்கனி முனிவரை கொடூரமாகக் கொன்று குவித்ததற்கு பழிதீர்க்க சத்ரியர்களான அரசர்கள் பரம்பரையையே 21 தலைமுறைகளுக்கு பழி வாங்குவேன் என சபதம் செய்தார். சபதம் செய்ததைப்போலவே தொடர்ந்து சத்ரிய குலத்தை ஒவ்வொரு சந்ததியினராக பழி வாங்கிக்கொண்டே வந்தார். அப்படிப்பட்ட சத்ரிய குலத்தில் பிறந்த பேரரசர்களுள் ஒருவர்தான் தசரதர். 


பல போர்களில் எதிரிகளை வெற்றிக்கொண்ட பெரு வீரராகவும், சிவபெருமானை வணங்குபவராய் தசரதன் இருந்தாலும்கூட,
பரசுராமரிடம், தவமிருந்து சிவபெருமானிடமிருந்து பெற்ற கோடாரி இருக்கும் வரையில், எந்த போர்த்திறன் மற்றும் தவ சக்தியாலும் பரசுராமரை வீழ்த்த முடியாது என அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதேசமயம் புதிதாகத் திருமணம் புரிந்தவர்களாக இருந்தால் எந்த அரசனையும் போரில் கொல்லாமல் அவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பும் குணம் பரசுராமருக்கு இருந்தது எனவும் தசரதர் தெரிந்து வைத்திருந்தார்.


அதனால் பரசுராமரின் பலவீனத்தை வைத்தே, அவரிடம் கொலையுண்டு வீழாமல் தப்பித்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். அதன் பின்பும்தான் அவர் ஒரு திட்டம் தீட்ட ஆரம்பித்தார். ஒவ்வொரு முறையும் பரசுராமர் தன்னைப் போருக்கு அழைக்க நேரில் வருகின்றபொழுதும், ஒவ்வொருமுறையும் புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார் தசரத மன்னன். அப்போது தன்னுடைய குணத்தினால், பரசுராமர் அவரைப் போருக்கு அழைக்காமல் அவரையும், அவருடைய புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பரசுராமர் தன்னுடைய பார்வையில் படும்போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து, செய்து 60,000 மனைவிகள் தசரதன் அரண்மனையில் குவிந்தனர்.  

தான் உயிர்பிழைத்திருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தசரதன் 60000 பெண்களை மணக்கவில்லை. யாராக இருந்தாலும் பரசுராமர் கொன்று விடுவார். தன்னுடைய நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நன்மை செய்ய அரசன் தேவை, தனக்கொரு வாரிசு உருவாகி, அந்த வாரிசு வரும்வரை உயிர்பிழைத்திருக்க வேண்டியது அரச விதிகளில் ஒன்ற் என்பதற்காகவும்தான் தசரதன் அவ்வாறு செய்தார். 

Published by
Staff

Recent Posts