தனுசு சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

தனுசு ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 3 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். குரு பகவான் வீட்டிற்கு அதிபதியாக இருக்கக்கூடியவர்கள் தனுசு ராசிக்காரர்கள். கடந்த ஏழரை ஆண்டுகளில் இருந்த அழுகை, நிம்மதியின்மை, அவமானங்கள் என பலவற்றையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

தற்போது அவை அனைத்தும் படிப்படியாக மாறும். சனி பகவான் சொந்தவீட்டுக்கே செல்வதால் உங்களின் கஷ்டங்களில் மாற்றங்களைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் ரீதியாக இருந்த பெரிய தொந்தரவுகள் சரியாகும். இருப்பினும் தவறாது உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயமாக்குங்கள்.

தொழில் வாழ்க்கை என்று பார்க்கையில் கூட்டுத் தொழிலில் இருந்து பிரிந்து தனித் தொழில் துவக்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த நெருடல்கள் சரியாகி மீண்டும் ஒன்றிணைவீர்கள்.

பெற்றோர், பெரியோர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். பொருளாதாரரீதியாக வாங்கிய பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். மேலும் பலரும் சேமிப்பில் முடிந்தளவு கவனம் செலுத்துவீர்கள்.

தங்கம் சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள். பிறருக்கு உதவி செய்யும் அளவு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தினைப் பார்ப்பீர்கள். பிள்ளைகளின் வேலை, தொழில் சரிவர அமையவில்லை என்ற வருத்தம் நீடித்தநிலையில் தற்போது அதற்கான தீர்வு கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

குருவாயூர் வழிபாடு செய்துவந்தால் சகலவிதமான ஏற்றங்களையும் பெறுவீர்கள். மேலும் திருக்கடையூர் அபிராமி கோவிலுக்குச் சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்துவந்தால் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் தீரும்.

புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும், நட்புகளால் உங்களுக்குத் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கப்பெறும். கடந்த கால அனுபவங்களால் நீங்கள் கற்ற பாடங்களை மனதில் கொண்டு வரவுள்ள காலத்தினை எதிர்கொள்ளுங்கள்.

நினைத்ததை சாதிக்கும் காலகட்டமாக இது இருக்கும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.