தனுஷின் வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த மாஸ் அப்டேட்!

தனுஷின் நானே வருவேன் திரில்லர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாத்தி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

கமல் பிறந்தநாள் கொண்டாட்டம் – ‘இந்தியன் 2’ கம்பீரமான புதிய போஸ்டர் !

இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி , “வாத்தி’ படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் அந்த பாடலை எழுதியது தனுஷ்,ஒரு காதல் பாடல்” என முதல் சிங்கிள் வெளியீடு குறித்து ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தனுஷ் நடித்த வாத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், முதல் சிங்கிள் நவம்பர் 10, 2022 அன்று [வியாழன்] வெளியிடப்படும்.

உடல் நிலை தேறி வரும் சமந்தா! கண்ணாடியுடன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

பாடலின் தமிழ் பதிப்பிற்கு ராமஜோகையா சாஸ்திரி தெலுங்கு பதிப்பை எழுதியிருந்தார். பாடகி ஸ்வேதா மோகன் முதல் சிங்கிளிலேயே குரல் கொடுத்துள்ளார்.

ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ், சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை அசித்யா மியூசிக் பெற்றுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.