ஓடிடியில் ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருக்கும் தனுஷின் கேப்டன் மில்லர்… இது வேற லெவல் மாஸ்…

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. கடந்த பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்பு கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் இப்படத்தை வெளியிட்டது.

கேப்டன் மில்லர் படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், அதிதி பாலன், சுதீப் கிஷன், ஜான் கொக்கின் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான கதையாகும்.

இதைப் பற்றி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், எனது மாமா இராணுவத்தில் இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் நடந்த போரில் கரும்புலி தாக்குதல் நடத்தபட்டது. அதைப் பற்றி எனது மாமா கூறுவதை இளம்வயதில் கேட்டிருக்கிறேன். அப்போதிருந்தே இந்த சம்பவங்களை படமாக எடுக்க வேண்டும் என்று தூண்டிக் கொண்டே இருந்தது. அதை நடிகர் தனுஷிடம் கூறும்போது அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறினார்.

பிரிட்டிஷ் படையிடம் இருந்து தனது சொந்த ஊரைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு இராணுவ வீரரை பற்றி இப்படம் எடுத்துரைக்கிறது. சுதந்திரத்திற்கு முன் மக்கள் எவ்வளவு அவதிபட்டர்கள் என்பதை நம் கண்முன் வலி மிகுந்ததாகவும் உணர்ச்சி மிகுந்ததாகவும் அப்படியே கொண்டு வந்திருப்பார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். நிறைய பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றதுடன் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் பெற்றுள்ளது ‘கேப்டன் மில்லர்’.

தற்போது ஓடிடியில் வெளியாகி நாற்பது நாட்களை கடந்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உலகளவில் ஒன்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து ட்ரெண்டிங் ஆகி புதிய சாதனை படைத்து வருகிறது. மேலும் அனைத்து இடங்களிலும் ட்ரெண்டிங் நம்பர் 1 இடத்தையும் ‘கேப்டன் மில்லர்’ பிடித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews