ஜிகர்தாண்டா டபுள் X படத்துல இப்படி ஒரு கிளைமேக்ஸா : படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம்தான் ஜிகர்தாண்டா டபுள் X. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா ஆகியோர் நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே சந்தரமுகி-2, ருத்ரன் என இந்த வருடம் ராகவா லாரன்ஸ் இருபடங்களைக் கொடுக்க மூன்றாவதாக ஜிகர்தாண்டா டபுள் X -லும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனியில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட படம் வெற்றி அடைந்தது. மேலும் தற்போது இந்தப் படத்திலும் ராகவா லாரன்சுடன் இணைந்து நடித்துள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஜிகர்தாண்டா படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து பாபிசிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதுவரை அலங்கரித்தது. இப்படத்தில் சித்தார்த் பாபிசிம்ஹாவை வைத்து படம் எடுக்கும் இயக்குநராக நடித்திருப்பார். லட்சுமி மேனனும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருப்பார்.

மாற்றிப் போட்ட ஒரே ஒரு வார்த்தையால் ஓஹோவென ஹிட் ஆன பாடல் : இப்படி ஒரு Secret-ஆ?

இதையடுத்து ஜிகர்தாண்டா டபுள்X படத்திலும் அதுபோன்றதொரு கதைக்களம் போன்று டிரைலரில் காட்டப்பட்டது. ராகவா லாரன்ஸ்-ன் தோற்றம் வித்தியாசமாக அமைந்ததால் படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் கிளம்பிய வேளையில், நடிகர் தனுஷ் படத்தைப் பார்த்துவிட்டு டிவீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

Dhanush

X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”ஜிகர்தாண்டா டபுள்X படத்தைப் பார்த்து விட்டேன். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு அபராமாக உள்ளது எனவும், படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் அற்புத படைப்பு“ என்றும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

தனுஷுன் இந்த டுவீட் இணையதளங்களில் வைரலாக ஜிகர்தாண்டா டபுள் X படத்தை ரசிகர்கள் மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ்க்கு சமீபத்தில் வெளியான இரண்டு படங்களும் கைகொடுக்காததால் ஜிகர்தாண்டா டபுள் X வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்துடன் கார்த்தியின் ஜப்பான் படமும் வெளியாவதால் கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜிகர்தாண்டா டபுள் X படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews