இது கேப்டன் மில்லர் பொங்கல் தான்!.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் வெளியானது. அதில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் என இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், அதிதி பாலன், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், விஜி சந்திரசேகர், நிவேதிதா சதீஷ் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

கேப்டன் மில்லர் அதகளம்:

கேப்டன் மில்லர் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. 125 நாட்களாக எடுக்கப்பட்ட இப்படத்தில் 75 நாட்களுக்கு சண்டை காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. 1930 களில் நடந்த கததையாக இப்படத்தை வடிவமைத்துள்ளனர். சுமார் ஆயிரம் பேர்களைக்கொண்டு எடுக்கப்பட்ட சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் படத்தின் ஹைலைட்டாக அமைத்து கொடுத்துள்ளார்.

தற்போது எல்லா படங்களிலும் துப்பாக்கி சுடும் காட்சிகளே ட்ரேண்டாகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இதற்கு முன்பு எடுத்த படங்களில் இருந்து இப்போது வரை வன்முறை காட்சிகள் கொண்ட படமாகவே எடுத்து வருகிறர். கேப்டன் மில்லரும் அதே போல் முழுக்க முழுக்க குண்டு சத்ததுடனே உருவாகி உள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், பிரிடிஷ் படைமேல் தனது கிராமத்திற்க்கு இருக்கும் பயத்தையும் மரியாதையையும் பார்த்து அவர்களுடன் சேரவேண்டும் என்று அசைபட்டு பல தடைகளுக்கு பிறகு பிரிடிஷ் படையில் சேர்கிறான். பின்னர் பிரிடிஷ் படையினர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை கொல்ல உத்தரவிட்ட பிறகு படையை விட்டு வெளியேறி அதற்கு காரணமான பிரிடிஷ் அதிகாரியை கொன்று அவர்களை எதிர்த்து கேப்டன் மில்லராக மாறுகிறார்.

கேப்டன் மில்லர் வசூல்:

கேப்டன் மில்லர் படத்தில் சிவ ராஜ்குமார் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பில் அசத்தியுள்ளார். தனுஷ் மூன்று தோற்றத்தில் வந்து திரை அரங்கையே அதிரவைத்துள்ளார். கேப்டன் மில்லர் படத்தில் பல இடங்களில் சென்சார் வைத்து வார்த்தைகளை மியூட் செய்துள்ளனர். ரத்த காட்சிகளையும் குறைத்து தான் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் கேப்டன் மில்லர் முதல் நாளில் 8.65 கோடி ரூபாயை வசூல் ஈட்டியிருப்பதாகவும் உலகம் முழுவதும் 17 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் விடுமுறை முழுக்க படம் ஓடினால் நிச்சயம் 100 கோடி வசூலை இந்த படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.