‘அழகி’ பட ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்.. ரியலாகவே தேவயானி செய்த சம்பவம்.. கணவர் மேல் அப்படி ஒரு காதலா ?

தமிழ் சினிமாவின் டிரென்ட் செட்டிங் படங்களில் அழகி படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஏனெனில் அதுவரை தமிழ் சினிமாவில் செயற்கை தனமாக காட்டப்பட்ட பள்ளி பருவ காதலை இயல்பாக படம் பிடித்து நம் மனதில் பள்ளி பருவ காதல் நினைவுகளை அசை போட வைத்தார் இயக்குனர் தங்கர் பச்சான். இந்த படம் உருவான பின் படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் படம் நன்றாக இல்லை என்று கூறி வாங்க மறுத்தனர். பின்னர் ஒரு வழியாக ரிலீஸ் ஆகி 3 வது நாளில் இருந்து மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது.

படத்தினை விமசகர்கள் கொண்டாட துவங்கினர். இளையராஜா இசையில் பாடல்கள் பழைய இசைஞானியை நினைவுபடுத்தின. பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ், மோனிஷா, சதீஷ் உள்ளிட்டோரின் நடிப்பு மிகவும் கவர்ந்தது. காமெடியை விவேக் கவனித்துக் கொண்டார்.

கல்கி படத்தில் கமலுக்கு வில்லன் ரோல் கிடையாதாம்… அப்படின்னா இவ்ளோ நாள் சொன்னது?

இப்படி பல வகைகளில் கொண்டாடப்பட்ட அழகி தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடந்த 2002 -ல் வெளிவந்த இந்தப்படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அப்போது அழகி திரைப்படத்துடன் அஜித் நடித்த RED படமும் வெளியாதால் அதிக திரையரங்குகளில் வெளியாகவில்லை. படத்திற்கு தாமதமான வெற்றியே கிடைத்தது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி தேவயானி பேட்டி ஒன்றில் கூறுகையில், ”அழகி திரைப்படம் எப்போதுமே எனக்கு சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அழகி படத்தில் நான் நடிக்கும் போது தான் திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் எனது திருமணத்திற்குப் பின் நான் ஒப்புக்கொண்ட முதல் திரைப்படம். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் எனக்கும் நந்திதாதாஸ்-க்கும் மியூசிக்கல் சேர் போட்டி நடைபெறும். அதில் இறுதியாக நாங்கள் இருவரும் சுற்றி வருவது போல் இருக்கும்.

ஏன் தல தலன்னு சுத்துறாங்க தெரியுமா..? அஜீத் பற்றி ரங்கராஜ் பாண்டே உடைத்த ரகசியம்

அக்காட்சியில் ஒரு பெண் தனது கணவனை இன்னொரு பெண்ணுக்கு எப்படி வீட்டுக் கொடுக்காமல் இருக்கும் அந்த மன நிலையை கொண்டு வர வேண்டும். அது விளையாட்டுத்தான் என்றாலும் நான் படத்தில் எனது கணவருக்காக அவரை கோபத்துடன் கீழே தள்ளி விடுவேன். உண்மையாகவே இந்தக் காட்சியில் அப்போதுதான் புதிதாக திருமணம் ஆகி இருந்ததால் எனது கணவர் ராஜகுமாரனை மனதில் வைத்து நடித்தேன்.” என்று கூறியிருக்கிறார்.

தங்கர் பச்சானின் ‘அழகி’ படத்தில் இடம்பெற்ற ‘பாட்டு சொல்லி..’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதினை பெற்றார் சாதனா சர்கம். மேலும் பல விருதுகளையும் அள்ளி குவித்தது அழகி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...